சஞ்சய் மஞ்சரேக்கர் தேர்வு செய்த கடந்த 10 ஆண்டுகளின் சிறந்த டெஸ்ட் அணி – ஒரு இந்திய வீரருக்கு மட்டுமே இடம்

Sanjay
- Advertisement -

ஐசிசி அறிவித்த கடந்த தசாப்தத்தின் (2011 – 2020) அணியில் இந்திய வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா,எம்எஸ் தோனி, பும்ரா மற்றும் அஸ்வின் ஆகியோர் இடம்பெற்றுள்ளது இந்திய அணிக்கு கிடைத்த பெருமையாக அமைந்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டு வரை சிறந்த ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 அணிகளை தேர்வு செய்து அறிவித்திருந்தது. அதில் விராட் கோலி, ரோகித் சர்மா, எம்எஸ் தோனி, பும்ரா, அஸ்வின் ஆகிய இந்திய வீரர்கள் அந்த அணியில் இடம் பெற்றிருந்தனர்.

Dhoni

அதுமட்டுமின்றி இந்த தசாப்தத்தின் ஐசிசி அணியில் ஒருநாள் மற்றும் டி20 அணியில் தோனி கேப்டனாக இருக்கிறார். டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருக்கிறார். இதோடு சேர்த்து ஐசிசி கடந்த தசாப்தத்திற்கான ஒருநாள் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு சிறந்த வீரரை தேர்வு செய்து அறிவித்துள்ளது. அதில் டெஸ்ட் போட்டியில் சிறந்த வீரராக ஆஸ்திரேலிய அதிரடி வீரர் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒருநாள் தொடரில் விராட் கோலியும் டி20 தொடரில் ரசித் கானும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எம் எஸ் தோனிக்கு “ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்” என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

தற்போது ஐசிசியை தொடர்ந்து பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆகியோர் கடந்த 10 ஆண்டுக்கான தனது சிறந்த அணியை தேர்வு செய்து உள்ளனர். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தேர்வு செய்துள்ள சிறந்த டெஸ்ட் அணியில் இந்தியா சார்பாக விராட்கோலி தவிர வேறு எந்த வீரரும் இடம்பெறவில்லை.

Williamson-1

அவர் தேர்வு செய்துள்ள டெஸ்ட் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சனை தேர்வு செய்துள்ளார். அலெய்ஸ்டர் குக் மற்றும் டேவிட் வார்னர் தொடக்க வீரராகவும், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகியோரை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும், வாட்லிங்கை விக்கெட் கீப்பராகவும், பென் ஸ்டோக்ஸ் மற்றும் பேட் கம்மின்ஸை ஆல்ரவுண்டராகவும், டிரண்ட் பவுல்ட், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் நாதன் லயோன் இவரை பந்துவீச்சாளராகவும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது டெஸ்ட் அணியில் தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

smith

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தேர்வு செய்துள்ள சிறந்த டெஸ்ட் அணி :

அலைஸ்டர் குக், டேவிட் வார்னர், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், பேட் கம்மின்ஸ்,வாட்லிங் (விக்கெட் கீப்பர்), டிரண்ட் பவுல்ட், ஜேம்ஸ் ஆண்டர்சன், நாதன் லயோன்.

Advertisement