டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 3 ஆவது பவுலராக இவரே விளையாடவேண்டும் – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

Sanjay
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியானது வருகிற ஜூன் மாதம் 18ஆம் தேதி தொடங்கி 22ம் தேதி முடிவடைய இருக்கிறது. இப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் மோதவிருகின்றன. இந்த போட்டிக்கு 20 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அறிவிக்கப்பட்டது. அதில் வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியிலில் முஹம்மது ஷமி, இஷாந் சர்மா, ஜாஸ்பிரத் பும்ரா ஆகிய அனுபவ வீரர்களுடன், இளம் வீரர்களான ஷர்துல் தாக்கூர் மற்றும் முஹம்மது சிராஜ் ஆகியோரும் இடம்பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

INDvsNZ

- Advertisement -

இந்த இறுதி போட்டியில் இந்திய அணியில், முன்னனி வேகப் பந்து வீச்சாளர்களாக இருக்கும் முஹம்மது ஷமி, இஷாந்த் சர்மா, ஜாஸ்பிரித் பும்ரா ஆகியோர்தான் விளையாடுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், இங்கிலாந்தின் தட்பவெப்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு முஹம்மது ஷமிக்கு பதிலாக மற்றொரு இளம் வீரரான ஷர்துல் தாக்கூரைத்தான் மூன்றாவது பௌலராக இந்தியா களமிறக்க வேண்டும் என்ற கருத்தை கூறியுள்ளார் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இணையளதம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், அப்பேட்டியில் கூறியதாவது…

இந்திய அணி ஏற்கனவே நியூசிலாந்து தொடரில் தோல்வியை சந்தித்தது என்பது நமது எல்லோருக்கும் தெரியும். அத்தொடரில் இந்திய அணியின் வீரர்கள் சரியாக பேட்டிங் ஆடவில்லை என்பதையும் தாண்டி, அத்தொடரில் இந்திய அணியில் பந்தை ஸ்விங் செய்யும் பௌலர்கள் இல்லாமல் போனதும்தான் நமது அணி அத்தொடரை இழப்பதற்கு முக்கியமான காரணமாகும், என்று அவர் கூறினார். மேலும் பேசிய அவர் இறுதிப்போட்டி நடக்க இருக்கும் சமயத்தில் இங்கிலாந்து நாட்டின் தட்பவெட்ப சூழ்நிலை எப்படி இருக்கும் என்பதைப் பற்றியும் எடுத்துக் கூறினார். அது பற்றி அவர் கூறும்போது,

Thakur

இங்கிலாந்து நாட்டில் கோடைக்காலத்தின் தொடக்கம் ஆரம்பமாகும் சமயத்தில் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நடக்க இருக்கிறது. அதுபோன்ற ஒரு சூழ்நிலையில் பந்தானது அதிகமாக ஸ்விங் ஆகும். எனவே இந்திய அணியில் இஷாந்த் சர்மா மற்றும் ஜாஸ்பிரித் பும்ரா ஆகியோருடன் மூன்றாவது பௌலராக ஷர்துல் தாக்கூரை விளையாட வைப்பதுதான் சிறந்த முடிவாக இருக்குமென்று நான் நினைக்கிறேன். ஷர்துல் தாக்கூர் பந்தை நன்றாக ஸ்விங் செய்ய கூடிய பௌலர் என்பதால் இங்கிலாந்தின் சுற்றுச் சூழலும் அவருக்கு பக்க பலமாக இருக்குமென்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் முஹம்மது சிராஜ், கடந்த ஆஸ்தரேலியா தொடர் மற்றும் தற்போது நடந்து முடிந்துள்ள இங்கிலாந்து தொடரிலும் மிகச் சிறப்பாக பந்து வீசி இருக்கிறார். மற்றொரு பௌலரான முஹம்மது ஷமி காயத்திலிருந்த விடுபட்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய போதும் அவரால் பழைய மாதிரி பந்தை ஸ்விங் செய்ய இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Thakur

இதற்கிடையில் ஷர்துல் தாக்கூரும் கடந்த ஆஸ்தரேலியா தொடரில் அறிமுகமாகி மிகச் சிறப்பாக பந்து வீசியதோடு மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். மேலும் இப்போது விளையாட இருக்கும் இறுதிப் போட்டியின் போது இருக்கப்போகும் தட்பவெட்ப சூழ்நிலையானது, நியூசிலாந்து தொடரின்போது ஏற்பட்ட சூழ்நிலையோடு சரியாக ஒத்துப் போகும் என்பதால் இந்திய அணி சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் கருத்தை கவனத்தில் கொண்டு, அதற்கு ஏற்றார்போல் அணியை தேர்வு செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement