டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் : பிளேயிங் லெவனை தேர்வு செய்த மஞ்சரேக்கர் – முக்கிய வீரருக்கு இடமில்லை

Sanjay
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நாளை நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான தனது இந்திய அணியை தேர்வு செய்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமாப சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இங்கிலாந்து நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னுடைய இந்திய அணியை தேர்வு செய்திருப்பதாக அறிவித்திருக்கும் அவர், யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டு முன்னனி வீரர்களை தனது அணியிலிருந்து நீக்கியுள்ளார். அவருடைய அணியில்,

INDvsNZ

ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில்லை தேர்ந்தெடுத்திருக்கும் அவர், மற்ற பேட்டிங் வரிசையில் வழக்கமாக விளையாடும் வீரர்களான சேட்டேஸ்வர் புஜாரா, விராட் கோஹ்லி, ரஹானே ஆகியோரையே தேர்வு செய்துள்ளார். ஆறாவது இடத்திற்கு, கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் காயம் காரணமாக அணியை விட்டு வெளியேறிய ஹனுமா விஹாரியை தேர்வு செய்திருக்கிறார். இதற்கு விளக்கமளித்த அவர், காயத்திற்கு முன்பாக விஹாரி நன்றாக விளையாடி இருப்பதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

மஞ்ச்ரேக்கர், தன்னுடைய அணியில் ஹனுமா விஹாரியை சேர்த்ததால் ஆறாவது இடத்தில் விளையாட வேண்டிய ரிஷப் பன்ட், ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் விஹாரியை சேர்த்ததால், ரவீந்திர ஜடேவிற்கு தன்னுடைய அணியில் இடம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த முடிவை நீண்ட யோசனைக்கு பிறகு எடுத்ததாக கூறிய அவர், ரவிச்சதந்திரன் அஷ்வின் என்ற ஒரே ஒரு ஸ்பின் பௌலரை மட்டுமே இந்த இறுதிப் போட்டிக்கான தன்னுடைய அணியில் இணைத்திருக்கிறார்.

Vihari

வேகப் பந்து வீச்சாளர்கள் வரிசையில் ஜாஸ்பிரித் பும்ரா மற்றும் முஹம்மது ஷமியை இணைத்துக் கொண்ட அவர், மூத்த வீரரான இஷாந்த் சர்மாவை நீக்கிவிட்டு இளம் வீரரான முஹம்மது சிராஜிர்கு வாய்ப்பளித்திருக்கிறார். இங்கிலாந்தில் முஹம்மது சிராஜின் ஸ்விங் பௌலிங் அற்புதமாக இருக்கும் என்று தான் நம்புவதால் இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். இந்திய அணியில் அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் இணைந்து விளையாடினால் இந்திய அணியின் பேட்டிங் வரிசையானது நீண்டாதாக இருக்குமென்றும் அதுதான் இந்திய அணிக்கு சாதகமான அம்சம் என்றும் முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறி வந்த நிலையில், தன்னுடைய அணியில் ரவீந்திர ஜடேஜாவிற்கு இடம் கொடுக்காமல் தவிர்த்திருக்கிறார் மஞ்ச்ரேக்கர். அவரின் இந்த செயலுக்கு ரவீந்திர ஜடேஜாவின் மேல் அவருக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியே காரணம் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர்.

- Advertisement -

siraj

மஞ்ச்ரேக்கரின் இந்திய அணி:

01. ரோஹித் சர்மா 02. சுப்மன் கில் 03. சேட்டேஸ்வர் புஜாரா 04. விராட் கோஹ்லி 05. ரஹானே 06. ஹனுமா விஹாரி 07. ரிஷப் பன்ட் 08. அஷ்வின் 09. முஹம்மத் சிராஜ் 10. முஹம்மது ஷமி 11. ஜாஸ்பிரித் பும்ரா

Advertisement