இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஆனது ஜூலை 13-ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை கொழும்பு மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் பல்வேறு இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதால் எத்தனை பேருக்கு அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியவில்லை.
அந்த வகையில் தற்போது முக்கியமான ஒரு இடத்திற்கு பலத்த போட்டி நிலவுகிறது. அந்த இடம் யாதெனில் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மென் தான். இந்திய அணியில் தற்போது விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்களாக மூத்த வீரர் சஞ்சு சாம்சன் மற்றும் இளம் வீரர் இஷான் கிஷன் ஆகியோர் இடையே பலத்த மோதல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் சஞ்சு சாம்சன் நல்ல அனுபவம் வாய்ந்த வீரர் அதுமட்டுமின்றி ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார்.
இதன் காரணமாக அவருக்கு முன்னுரிமை தருவதா ? அல்லது சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமாகி அறிமுக போட்டியிலேயே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்த இஷான் கிஷனுக்கு வாய்ப்பு தருவதாக என்கிற காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இலங்கை தொடரில் யாரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட வைக்க வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். குறித்து அவர் கூறுகையில் : இலங்கை தொடருக்கான இந்திய அணியில் பல இளம் வீரர்கள் உள்ளதால் அவர்களின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு வீரர்களை இந்திய அணி களமிறங்க முடிவு செய்ய வேண்டும்.
என்னை பொறுத்தவரை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக இஷான் கிஷன் சிறப்பாக செயல்படுவார் விக்கெட் கீப்பிங் மட்டுமின்றி பேட்டிங்கில் அதிரடி ஆட்டம் விளையாடும் அவர் இந்திய அணிக்கு தேவை. அதே வகையில் சஞ்சு சாம்சன் மிக சிறப்பான வீரர் தான் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இருப்பினும் அவர்கள் இருவரில் ஒருவர் என்றால் நான் இஷான் கிஷனுக்கு தான் முன்னிரிமை வழங்குவேன் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நேரடியான பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.