- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சச்சின் மாதிரியே கோலிக்கும் இந்திய மண்ணில் பிரச்சனை இருக்கு.. ரன்ஸ் குவிக்க இதான் வழி.. சஞ்சய் மஞ்ரேக்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர விராட் கோலி கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சொந்த காரணங்களுக்காக விளையாடவில்லை. அதைத் தொடர்ந்து தற்போது துவங்கியுள்ள வங்கதேச தொடரில் இந்த வருடம் முதல் முறையாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கினார். அதனால் ஜோ ரூட் போல பெரிய ரன்கள் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விராட் கோலி அசத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இருப்பினும் சென்னையில் துவங்கிய முதல் போட்டியில் முதல் இன்னிங்சில் அவர் 6 ரன்களில் அவுட்டானார். அதே போல 2வது இன்னிங்ஸில் 17 ரன்கள் குவித்த அவர் நல்ல துவக்கத்தை பெற்றார். இருப்பினும் அப்போது நடுவரின் தவறான தீர்ப்பாலும் ரிவியூ எடுக்காததாலும் மீண்டும் அவுட்டான விராட் கோலி ரசிகர்களுக்கும் இந்திய அணிக்கும் ஏமாற்றத்தையே கொடுத்தார்.

- Advertisement -

சச்சின் போல விராட் கோலி:

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரை போலவே அவ்வப்போது சுழலுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் விராட் கோலி தடுமாறுவதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். இருப்பினும் வேகத்துக்கு சாதகமான ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் விராட் கோலி அசத்துவதாக மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். எனவே வெளிநாட்டு மண்ணில் விராட் கோலி பெரிய ரன்கள் குவிப்பார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவில் பேட்டிங் செய்வதை விராட் கோலி அவ்வளவாக ரசிக்கவில்லை. சச்சின் டெண்டுல்கரை போலவே அவர் சொந்த மண்ணுக்கு வெளியே சொந்த மண்ணை விட நன்றாக விளையாடுகிறார் என்று நினைக்கிறேன். எடுத்துக்காட்டாக தென் ஆப்பிரிக்காவில் அவர் எவ்வளவு சிறப்பாக விளையாடினார் என்பதை நாம் பார்த்தோம்”

- Advertisement -

வெளிநாட்டில் அசத்துவார்:

“வெளிநாட்டு சூழ்நிலைகளில் அவர் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார். அதனால் பரவாயில்லை. சொந்த மண்ணை விட வெளிநாட்டு மண்ணில் ரன்களை எடுப்பது எவ்வளவோ மேல்” என்று கூறினார். அவர் கூறுவது போல வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அந்த தொடரில் இந்தியா வெல்வதற்கு விராட் கோலி கண்டிப்பாக பெரிய ரன்கள் குவிப்பது அவசியமாகிறது.

இதையும் படிங்க: 119 ரன்ஸ்.. 12 சதங்கள்.. டாப்பில் இந்தியா.. ரூட், பாபர் அசாமை ஓரங்கட்டி வங்கதேசத்திடம் சுப்மன் கில் ஸ்பெஷல் சாதனை

இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்த இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 287-4 ரன்கள் விளாசி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. மறுபுறம் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கு அவுட்டான வங்கதேசம் 2வது இன்னிங்ஸில் 515 என்ற மெகா இலக்கை துரத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -