- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இங்க சொதப்பினாலும் பரவால்ல.. விராட், ரோஹித் அங்க காலை வாரிடக்கூடாது.. ஓய்வு பற்றி சஞ்சய் மஞ்ரேக்கர்

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இந்த வருடம் அயர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தானுக்கு எதிராக 6 ரன்கள் வித்தியாசத்தில் மறக்க முடியாத வெற்றியை பெற்ற இந்தியா சொந்த மண்ணில் அமெரிக்காவையும் தோற்கடித்தது. இதைத் தொடர்ந்து ஜூன் 20ஆம் தேதி இந்தியா தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

முன்னதாக இந்த வருடம் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் லீக் சுற்றில் பெரியளவில் அசத்தவில்லை. குறிப்பாக ரோஹித் சர்மா முதல் போட்டியில் அரை சதமடித்து அசத்தார். ஆனால் அதை தவிர்த்து பெரிய ரன்கள் எடுக்கத் தவறிய அவர் பின்னடைவை ஏற்படுத்தினார்.

- Advertisement -

மஞ்ரேக்கர் கருத்து:
அவருடன் துவக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி 1, 4, 0 ரன்களில் அவுட்டாகி அணிக்கு பின்னடைவையும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் கொடுத்தனர். இந்நிலையில் லீக் சுற்றில் தடுமாறிய விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்கள் நாக் அவுட் போட்டிகளில் பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். எனவே லீக் சுற்றில் அவர்கள் தடுமாறினாலும் பரவாயில்லை என மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.

அத்துடன் இந்த உலகக் கோப்பை முடிந்ததும் டி20 கிரிக்கெட்டில் விடை பெறுவது பற்றி அவர்கள் யோசிக்க வேண்டும் என்று தெரிவிக்கும் மஞ்ரேக்கர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்களை தேர்ந்தெடுத்த நீங்கள் இத்தொடரில் அனுபவத்தை பின்பற்றி செல்கிறீர்கள். பொதுவாக உலகக் கோப்பைகளில் அனுபவமிக்க வீரர்கள் முக்கியமான நேரத்தில் அசத்துவார்கள்”

- Advertisement -

“எனவே தற்சமயத்தில் அவர்களைப் போன்ற சில வீரர்கள் ஃபார்மில் இல்லையென்றாலும் கவலையில்லை. ஆனால் அவர்கள் நாக் அவுட் சுற்றில் செமி ஃபைனல் அல்லது ஃபைனல் போன்ற போட்டிகளில் வெற்றியை தீர்மானிக்கும் இன்னிங்ஸ் விளையாடி கோப்பையை வென்றுக் கொடுக்க வேண்டும். அதைத்தான் நீங்கள் சீனியர் வீரர்களிடம் இருந்து எதிர்பார்ப்பீர்கள்”

இதையும் படிங்க: மொத்த வெறியையும் காட்டிய பாபர் படை.. 32/6 என விழுந்தும் அடங்க மறுத்த அயர்லாந்து.. பாகிஸ்தான் வெல்லுமா?

“அதே சமயம் 1992 உலகக் கோப்பையில் இன்சமாம் போல சில இளம் வீரர்களும் வெற்றியில் முக்கிய பங்காற்றினால் அது போனஸ். இப்பினும் சீனியர்கள் அதிகமாக பங்கேற்ற வேண்டும். அதனாலேயே அவர்களை தேர்வுக் குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த உலகக் கோப்பை முடிந்ததும் அவர்கள் தங்களுடைய டி20 ஓய்வு பற்றிய திட்டங்கள் என்ன என்பதை சொல்ல வேண்டும். அல்லது தேர்வு குழுவினர் அதைப் பற்றி சிந்திப்பார்கள்” என்று கூறினார்.

- Advertisement -