சுப்மன் கில் மோசம்.. அவரை தவிர கோலி, ரோஹித் உட்பட யாருமே சுழலை தெம்பா அடிக்கல.. சஞ்சய் மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar 2
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக புனேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. ஏற்கனவே முதல் போட்டியிலும் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. அதனால் நியூஸிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் அவமானத் தோல்வியை பதிவு செய்துள்ளது.

அத்துடன் 2012க்குப்பின் தொடர்ச்சியாக சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் வீரநடை போட்டு வந்த இந்தியாவின் வெற்றி நடை முடிந்து போனது. அந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான புனே மைதானத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்து ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமானது.

- Advertisement -

சுப்மன் கில் மோசம்:

இந்நிலையில் புனேவில் 77 (66) ரன்கள் விளாசிய ஜெய்ஸ்வால் மட்டுமே பயமின்றி தன்னம்பிக்கையுடன் விளையாடியதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். ஆனால் சுப்மன் கில் சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் திண்டாடுவது தொடர்வதாக தெரிவிக்கும் அவர் அனுபவமிக்க விராட் கோலி, ரோஹித் சர்மாவும் தன்னம்பிக்கையுடன் விளையாடவில்லை என்று கூறியுள்ளார். ஒருவேளை அந்த டாப் 3 பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்கள் எடுத்திருந்தால் இந்தியா வென்றிருக்கும் என்றும் சஞ்சய் மஞ்ரேக்கர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜெய்ஸ்வால் – கில் ஜோடியாக சேர்ந்து விளையாடியதால் நமக்கு ஆச்சரியம் காத்திருக்கிறதோ என்று நான் நினைத்தேன். ஆனால் சுப்மன் கில் ஸ்பின்னர்களுக்கு எதிராக நன்றாக விளையாடியதாக உணரவில்லை. பேட்ஸ்மேன்கள் தங்களுடைய கால் நகர்வை உள்ளுணர்வாக நம்புவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் அவர் ஸ்பின்னர்களுக்கு எதிராக அழுத்தத்துடன் விளையாடியது தெளிவாக தெரிந்தது”

- Advertisement -

சுமாரான பேட்ஸ்மேன்கள்:

“விராட் கோலி மீண்டும் லைனை தவறாக படித்தார். ரோகித் சர்மா களத்தில் தன்னம்பிக்கையுடன் விளையாடவில்லை. டாப் 4இல் 3 பேர் ஸ்பின்னர்களுக்கு எதிராக தன்னம்பிக்கையுடன் விளையாடவில்லை. பொதுவாக இது போன்ற ஆடுகளங்களில் நீங்கள் முதல் சில மணி நேரங்களை சமாளித்து விளையாட வேண்டும். அது போன்ற நேரத்தில் இந்தியா கொஞ்சம் தடுப்பாட்டத்தை விளையாடியிருந்தால் பின்னர் நிலைமை எளிதாக மாறியிருக்கும்”

இதையும் படிங்க: 3, 5 உட்பட எல்லாரும் மாறிட்டாங்க.. இந்தியாவுக்கு புஜாரா மாதிரி ஒருத்தர் தேவை.. ஆகாஷ் சோப்ரா கவலை

“ஒருவேளை இந்தியா ஆரம்பத்திலேயே அதிக விக்கெட்டுகளை இழக்காமல் இருந்திருந்தால் ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் வெற்றிக்கு அருகே அழைத்து வந்திருப்பார்கள்” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் நவம்பர் ஒன்றாம் தேதி கடைசி போட்டி துவங்குகிறது. அதிலாவது இந்தியா வென்று ஒய்ட்வாஸ் அவமான தோல்வியை தவிர்க்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement