உழைச்சு வந்ததும் இந்திய வீரர்கள் அந்த பக்கம் போறதே இல்லை.. அதான் இந்தியா தோற்குது.. மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 2012 முதல் தொடர்ந்து சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் உலக சாதனையுடன் வெற்றி நடை போட்டது. அது கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக 0 – 3 (3) என்ற கணக்கில் சந்தித்த ஒயிட்வாஸ் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது. அந்த வேதனை தீர்வதற்குள் தற்போது தென்னாபிரிக்காவிடம் 15 வருடம் கழித்து 0 – 2 (2) என்ற கணக்கில் இந்தியா சொந்த மண்ணில் தோற்றுள்ளது.

அதனால் சொந்த மண்ணில் எப்படி விளையாட வேண்டும் என்பதையே இந்திய அணி மறந்து விட்டதா? என்று ரசிகர்கள் வேதனையை வெளிப்படுத்துகின்றனர். அந்த தோல்விகளுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் சுழல் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடியது முக்கிய காரணமானது. அதே போல சோதனை என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட மாற்றங்களும் தவறான தேர்வுகளும் தோல்விக்கு வித்திட்டன.

- Advertisement -

எட்டிப் பார்க்காத வீரர்கள்:

இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக விளையாடும் வீரர்கள் இந்திய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றதும் தங்களை வெளிநாட்டு வீரர்களைப் போல் நினைத்துக் கொள்வதாக சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்துள்ளார். அதனாலேயே இந்திய அணிக்காக விளையாடும் போது நமது வீரர்கள் யாரும் உள்ளூருக்கு சென்று ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதில்லை என்று அவர் சாடியுள்ளார்.

அவர்கள் உள்ளூர் பக்கம் எட்டிப் பார்க்காத காரணத்தாலேயே இந்திய அணி தற்போது அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ளதாகவும் மஞ்ரேக்கர் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா தோற்க 2 காரணங்கள் உள்ளது. அந்த 2 அணிகளும் இந்தியாவை வேகம், ஸ்விங், பவுன்ஸ் ஆகியவற்றால் தோற்கடிக்கவில்லை”

- Advertisement -

மஞ்ரேக்கர் விமர்சனம்:

“ஆனால் சுழலால் வீழ்த்தின. பொதுவாக இந்திய பேட்ஸ்மேன்கள் உள்ளூரில் ஏராளமான ரன்கள் அடித்த காரணத்தாலேயே இந்தியாவுக்காக தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால் அப்படி தேர்வு செய்யப்படும் அவர்கள் வெளிநாட்டவர்களாக மாறி விடுகிறார்கள். அதனால் பெரும்பாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாத அவர்கள் வெளிநாடுகளில் விளையாடுகின்றனர்”

இதையும் படிங்க: விராட் கோலி, ரோஹித் மாதிரி.. இந்தியாவை வீழ்த்த எங்களுக்கும் அவர் வந்துருக்காரு.. அஸ்வெல் பிரின்ஸ் பேட்டி

“ஜெய்ஸ்வால், ராகுல், கில், பண்ட் ஆகியோர் கடந்த 2 வருடங்களில் வெளிநாடுகளில் 9 – 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார்கள். ஆனால் அதுவே இந்தியாவில் அவர்கள் அவ்வளவு போட்டிகளில் விளையாடவில்லை. சொந்த மண்ணில் விளையாடும் தொடர்களுக்கு முன் அவர்கள் உள்ளூர் முதல் தர போட்டிகளில் விளையாடுவதில்லை. அந்த வகையில் அவர்கள் சொந்த மண்ணில் நடைபெறும் தொடருக்கு முன் அவர்கள் மிகவும் சுமாராக தயாராகிறார்கள் அல்லது சுழலுக்கு சாதகமான பிட்ச்களில் சமீபத்தில் விளையாடிய அனுபவமின்றி தடுமாறுகின்றனர்” என்று கூறினார்.

Advertisement