ஜஸ்ப்ரித் பும்ரா மாதிரி திறமையால் முன்னேறிய சூர்யகுமார் அதுக்கு தகுதியானவர்.. சஞ்சய் மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar
- Advertisement -

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் செயல்பட்டு வருகிறார். 2022 ஐபிஎல் கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியா சர்வதேச கிரிக்கெட்டிலும் ரோஹித் இல்லாத போது இந்திய அணியை கேப்டனாக வழி நடத்து வந்தார். மேலும் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு துணைக் கேப்டனாக முக்கிய பங்காற்றிய அவர் மும்பை ஐபிஎல் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

அதனால் ரோஹித் சர்மா ஓய்வுக்கு பின் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவரை புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஃபிட்டாக இல்லை என்று சொல்லி கழற்றி விட்டார். மறுபுறம் 2021ஆம் ஆண்டில் அறிமுகமாகி 360 டிகிரியில் அடித்து நொறுக்கிய சூரியகுமார் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி இன்றியமையாத வீரராக உருவெடுத்துள்ளார்.

- Advertisement -

தகுதியான கேப்டன்:

அதன் காரணமாக அவரை புதிய கேப்டனாக கௌதம் கம்பீர் தேர்ந்தெடுத்துள்ளார். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜஸ்ப்ரித் பும்ரா திறமையால் உழைத்து அடுத்த கேப்டன் என்ற நிலைக்கு வந்தது போல் சூரியகுமார் டி20 போட்டிகளில் செயல்படுவதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“இது நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டது 2 வருடங்களில் நடைபெறவில்லை. ஆரம்பக் காலங்களில் அவரிடம் 2 ஷாட்டுகள் மட்டுமே இருந்தது எனக்கு நினைவிருக்கிறது. பந்தை எங்கே போட்டாலும் அவர் ஆரம்பத்திலேயே ஃபிளிக் ஷாட் அடிப்பார். அங்கிருந்து சூரியகுமார் வளர்ந்தது அற்புதமானது. கொல்கத்தா அணியில் மிடில் ஆர்டரில் விளையாடிய அவர் இன்று உலகின் சிறந்த டி20 பேட்ஸ்மேனாக வருவார் என்று யார் கணித்தார்கள்”

- Advertisement -

மஞ்ரேக்கர் பாராட்டு:

“அவரிடம் நிறைய பொறுமை இருக்கிறது. தன்னுடைய கேரியர் முழுவதிலும் பேட்டி கொடுக்கும் போது அவருடைய முகத்தில் புன்னகை இருப்பதை உங்களால் பார்க்க முடியும். ஜஸ்ப்ரித் பும்ரா டெஸ்ட் கேப்டன்ஷிப் பொறுப்புக்கு தகுதியானவராக வந்தது போல் இலகுவான இதயத்தை கொண்ட சூரியகுமார் தற்போதைய இந்திய டி20 அணியில் மிகவும் சிறந்த வீரராக வந்துள்ளார்”

இதையும் படிங்க: எஸ்ஏ20: 85 ரன்ஸ்.. டு பிளேஸிஸ் அசத்தல்.. வாழ்வா – சாவா போட்டியில் டிகே அணியை வீழ்த்திய ஜேஎஸ்கே

“சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனான உங்களுக்கு சிறந்த பயிற்சியாளர் தேவை. ஏனெனில் உங்களுக்கு வெளிப்புறத்தில் இருந்து உள்ளீர்கள் தேவை. அந்த வகையில் அணி தேர்வில் சூரியகுமார் ஏதாவது சொல்கிறாரா? என்பதையும் பார்க்க விரும்புகிறேன். சாம்சன், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி போன்ற வீரர்கள் சூரியகுமார் தலைமையில் சிறப்பாக விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement