
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முதல் போட்டியில் சதத்தை அடித்து வெற்றியில் பங்காற்றினார். அதனால் தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் அதற்கடுத்த போட்டிகளில் மீண்டும் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் விக்கெட்டை கொடுத்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவும் இந்தியாவுக்கு பின்னடைவாகவும் அமைந்தது.
அதை சரி செய்வதற்கு சச்சின் போல கவர் ட்ரைவ் அடிக்காமல் பேட்டிங் செய்யுங்கள் என சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் ஆலோசனை தெரிவித்தார்கள். ஆனாலும் அதை கேட்காத விராட் கோலி தொடர்ந்து அப்படியே விளையாடி அவுட்டானார். அந்த சூழ்நிலையில் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக கருதப்படும் விராட் கோலி தன்னுடைய வழியில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை சமாளிப்பார் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரோஹித் சர்மா விமர்சகர்களை சமாளிப்பதற்காக போகிற போக்கில் அப்படி சொன்னதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். ஏனெனில் உண்மையிலேயே அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை சமாளிக்கும் வழியை கண்டறிய முடியுமானால் அதை இந்நேரம் விராட் கோலி கண்டறிந்திருப்பார் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“அது உண்மையில் தவறான அறிக்கை. சொல்ல வேண்டும் என்பதற்காக ரோஹித் அதைச் சொன்னார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஏற்கனவே தடுமாறி வரும் விராட் கோலிக்கு எதிராக வெளியில் ஏதேனும் கருத்தை சொல்லி அவரால் மேலும் அழுத்தத்தை உண்டாக்க முடியாது. இருப்பினும் வீரர்கள் தங்களுக்குள் வித்தியாசமாக சிந்திப்பார்கள். அந்த அறிக்கையில் ரோகித் சர்மாவால் உண்மையாக பேச முடியவில்லை”
“குறிப்பாக நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான் தனது வழியில் தீர்வை கண்டறிவார் என்று சொல்வது உண்மையல்ல. ஒருவேளை அது உண்மையாக இருந்திருந்தால் இந்நேரம் விராட் கோலி அதை செய்திருப்பார். இனிமேலும் அது விராட் கோலிக்கு பிரச்சனை என்று நான் பார்க்கவில்லை. அதே சமயம் பேட்டிங் பயிற்சியாளர் மட்டுமே அவருடைய பிரச்சனையைத் தீர்க்க முடியும்”
இதையும் படிங்க: ரோஹித் சொன்னது உண்மையில்ல.. விராட் கோலியால் அந்த பிரச்சனையை தனியாளா தீர்க்க முடியாது.. சஞ்சய் மஞ்ரேக்கர்
“எனவே தனது பிரச்சினையை தீர்க்க விராட் கோலிக்கு வெளிப்புற உதவி தேவைப்படுகிறது. ஏனெனில் அவரால் தன்னுடைய சொந்த வழியில் அந்த பிரச்சனையை தீர்க்க முடியவில்லை” என்று கூறினார். அவர் கூறுவது போல பல வருடங்களாகவே விராட் கோலி அந்த பிரச்சனையை சரி செய்ய முடியாமல் தவிப்பது குறிப்பிடத்தக்கது.