- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ராகுல் – ரோஹித் இப்படி ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுப்பாருன்னு எதிர்பாக்கல.. சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணி 2024 டி20 உலகக் கோப்பையில் சிறப்பான துவக்கத்தை பெற்று சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இந்த வருடம் லீக் சுற்றில் அயர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்திய அணி அமெரிக்காவையும் தோற்கடித்தது. அதனால் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்த இந்தியா தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானை ஜூன் 20ஆம் தேதி எதிர்கொள்கிறது.

முன்னதாக இந்தத் தொடரில் இந்திய பேட்டிங் வரிசையில் முக்கியமான மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டது. முதலில் இடது – வலது கை ஓப்பனிங் ஜோடியாக ரோஹித் – ஜெய்ஸ்வால் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2024 ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்ற காரணத்தால் விராட் கோலி துவக்க வீரராக களமிறக்கப்பட்டார்.

- Advertisement -

புத்திசாலித்தனமான முடிவு:
அந்த முடிவு இதுவரை இது இந்தியாவுக்கு சாதகமாக அமையவில்லை. ஆனால் அதற்காக மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய ரிஷப் பண்ட்டை 3வது இடத்தில் களமிறக்கிய முடிவு இந்தியாவுக்கு வெற்றிகரமாக அமைந்தது. ஏனெனில் பேட்டிங்க்கு சவாலான நியூயார்க் பிட்ச்சில் விராட் கோலி போன்றவர்கள் தடுமாறிய போது தம்முடைய ஸ்டைலில் அட்டகாசமாக விளையாடிய அவர் 3 போட்டிகளில் அதிகபட்சமாக 96 ரன்கள் குவித்தார்.

குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக 42 ரன்கள் அடித்த ரிஷப் பண்ட் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். இந்நிலையில் ரிஷப் பண்ட்டை 3வது விளையாட வைத்த புத்திசாலித்தனமான முடிவை ராகுல் டிராவிட் – ரோகித் சர்மா எடுப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது பற்றி பிடிஐ இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அணி நிர்வாகம் இம்பேக்ட் வீரர்களை அதிகமாக விரும்புகிறது”

- Advertisement -

“ரிஷப் பண்ட் 3வது இடத்தில் விளையாடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்த புத்திசாலித்தனமான முடிவு மிகப்பெரிய திருப்பத்தை கொடுத்துள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சாம்சன், ரோஹித் சர்மா நேரம் எடுத்து விளையாடிய போது பிட்ச்சை பயன்படுத்தி அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் தன்னுடைய கிளாஸை காண்பித்தார்”

இதையும் படிங்க: 2011இல் தொப்பை மேகிமேன்னு கிண்டலடிச்சாங்க.. ஹிட்மேனாக மாறிய ரோஹித்தின் பின்னணியை பகிர்ந்த அபிஷேக் நாயர்

“இந்த உலகக் கோப்பையில் இதுவரை அவர் தான் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேனாக செயல்பட்டுள்ளார். மிகவும் சவாலான பிட்ச்சில் ரிஷப் பண்ட் தன்னுடைய கிளாஸை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் கடந்த உலகக் கோப்பை போல இம்முறையும் டாப் 6 பேட்ஸ்மேன்களில் யாருமே இடது கை வீரர்கள் இல்லை. அதனாலேயே அவருக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு அடுத்தபடியாக ஜடேஜா 7வது இடத்தில் விளையாடுகிறார்” என்று கூறினார்.

- Advertisement -