- Advertisement -
இந்திய கிரிக்கெட்

107மீ சிக்ஸர்.. மைதானத்துக்கு வெளியே பறந்த சிக்ஸர்.. தலைமுறையில் ஒரு வீரர்.. பாராட்டிய சஞ்சய் மஞ்ரேக்கர்

பெங்களூருவில் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைசி நாளில் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நியூசிலாந்து விளையாடி வருகிறது. அக்டோபர் 17ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 46க்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

பின்னர் விளையாடிய நியூசிலாந்து டேவோன் கான்வே 91, ரச்சின் ரவீந்திரா 133 ரன்கள் எடுத்த உதவியுடன் 402 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா பொறுப்புடன் பேட்டிங் செய்து 462 ரன்கள் குவித்தது.

- Advertisement -

ரிஷப் பண்ட் அசத்தல்:

அதிகபட்சமாக ஜெயஸ்வால் 35, கேப்டன் ரோஹித் சர்மா 52, விராட் கோலி 70, ரிஷப் பண்ட் 99, சர்பராஸ் கான் 150 ரன்கள் குவித்தனர். நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 3, வில்லியம் ஓரோர்கே 3 விக்கெட்டுகளை எடுத்தனர். முன்னதாக இந்தப் போட்டியில் சர்பராஸ் கான் – ரிஷப் பண்ட் ஆகியோர் 177 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அவர்களுடைய ஆட்டத்தால் இந்தியா குறைந்தபட்சம் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது.

அதில் 2வது நாளில் முழங்காலில் காயத்தை சந்தித்த ரிஷப் பண்ட் மேற்கொண்டு பேட்டிங் செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியாவுக்காக முதலுதவிகளை எடுத்துக் கொண்டு களமிறங்கிய அவர் தம்முடைய அதிரடியான ஸ்டைலில் ரன்களை குவித்தார். குறிப்பாக நியூசிலாந்தின் அனுபவ வீரர் டிம் சௌதீ வீசிய 87வது 3வது பந்தை ரிஷப் பண்ட் நன்றாக வாங்கி முட்டி போட்டு முரட்டுத்தனமாக அடித்தார்.

- Advertisement -

தலைமுறையில் ஒருவர்:

அவர் கொடுத்த பவருக்கு பட்டாசாக 107 மீட்டர் பறந்த பந்து சின்னசாமி மைதானத்திற்கு வெளியே சென்று விழுந்தது. அதைப் பார்த்து கிளன் பிலிப்ஸ் போன்ற நியூசிலாந்து வீரர்கள் வாயடைத்துப் போனார்கள். இந்நிலையில் டிம் சௌதீ போன்ற தரமான பவுலருக்கு எதிராக அடித்த சிக்ஸர் “ரிஷப் பண்ட் தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரக்கூடிய வீரர்” என்பதை நிரூபிப்பதாக சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: 0இல் துவங்கி 150 ரன்ஸ்.. இந்திய அணிக்காக 71 வருடங்கள் கழித்து தனித்துவ சாதனையை படைத்த சர்பராஸ் கான்

“தலைமுறையில் ஒரு முறை மட்டுமே வரக்கூடிய வீரர். அது தான் ரிஷப் பண்ட். சௌதீக்கு எதிரான அவர் அடித்த சிக்சர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் பார்த்த சிறந்த ஷாட்களில் ஒன்று” என்று பாராட்டியுள்ளார். அப்படி காயத்தையையும் தாண்டி அட்டகாசமாக விளையாடிய ரிஷப் பண்ட் கடைசியில் 99 ரன்களில் அவுட்டானது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -