சென்னை டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு இவரே முக்கிய காரணம் – சீனியர் வீரர் மீது பாய்ந்த சஞ்சய் மஞ்சரேக்கர்

Sanjay
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக இங்கிலாந்து அணி வீரர்கள் முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் எடுத்தது பெரிய பாதகமாக அமைந்து விட்டது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா மற்றும் துணை கேப்டன் ரஹானே ஆகிய இருவரும் பெரிய அளவில் சொதப்பினர்.

Eng-bess

- Advertisement -

ஏனெனில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் முழுவதும் கோலி, ரகானே மற்றும் புஜாரா ஆகியவர்களை நம்பி இருக்கிறது. அப்படி உள்ள வேளையில் முதல் இன்னிங்சில் ஒரு ரன்னும் இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட் ஆகி ரஹானே ஏமாற்றம் அளித்தார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த ரஹானே அதன் பிறகு நாடு திரும்பியதும் கோலியிடம் கேப்டன் பதவியை ஒப்படைத்தார்.

இந்நிலையில் சென்னை போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஹானேவின் இந்த மோசமான பேட்டிங் தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள சஞ்சய் மஞ்சரேக்கர் கூறுகையில் : கேப்டனாக இல்லாமல் ஒரு பேட்ஸ்மேனாக ரகானே பார்க்கும்போது மெல்போர்ன் டெஸ்ட் தவிர மற்ற போட்டிகளில் அவர் மோசமாக விளையாடி வருகிறார்.

சதம் அடித்த பிறகு வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் ரஹானே அதை இழந்துவிட்டார் என்று அவர் மீது விமர்சனம் முன்வைத்துள்ளார். ரஹானே இந்தியாவில் விளையாடிய கடைசி 7 இன்னிங்ஸ்களில் 64 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rahane 1

நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை 13ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement