ஸ்கூல் பையன் மாதிரியான விராட் கோலி.. கோச்சிங் சொல்லுங்க.. நேரலையில் மோதிக்கொண்ட பதான் – மஞ்ரேக்கர்

Irfan Pathan
- Advertisement -

மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140, லபுஸ்ஷேன் 72 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்ததாக விளையாடும் இந்தியா 2வது நாள் முடிவில் 164-5 என தடுமாறி வருகிறது. முன்னதாக அப்போட்டியில் இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் 3, ராகுல் 24 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அப்போது ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகியோர் நங்கூரமாக விளையாடி ரன்களை குவித்தார்கள்.

- Advertisement -

நேரலையில் மோதல்:

குறிப்பாக ஜெய்ஸ்வால் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சுமாரான பந்துகளை அதிரடியாக எதிர்கொண்டு அட்டகாசமாக விளையாடி 82 ரன்கள் தொட்டார். அப்போது ஒரு பந்தை சிங்கிள் எடுக்க முயற்சித்த அவர் முழுமையாக ஓடிவிட்டார். மறுபுறம் பந்தை மட்டுமே கவனித்த விராட் கோலி அவரை பார்க்காததால் ஜெய்ஸ்வால் பரிதாபமாக ரன் அவுட்டாகி சதத்தையும் நழுவ விட்டார்.

இந்நிலையில் அதற்கு விராட் கோலி தான் காரணம் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்தார். அதை மற்றொரு முன்னாள் வீரர் இர்பான் பதான் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது அவர்களுக்கிடையே கிட்டத்தட்ட சண்டைக்கு சமமாக கோபத்துடன் நிகழ்ந்த காரசாரமான விவாதம் பின்வருமாறு.

- Advertisement -

விராட் கோலி மீது தவறா:

மஞ்ரேக்கர்: இந்த தருணத்தை நாம் விராட் கோலியின் பக்கத்திலிருந்து கொஞ்சம் பார்க்க வேண்டும். அங்கே பந்தை மட்டும் பார்த்து ரன் இல்லை என்று விராட் கோலி சொன்னது பள்ளி வயது சிறுவனை போல் செய்த தவறாகும். பொதுவாக ரன்கள் எடுப்பதற்கு எதிர்ப்புறம் இருக்கும் பேட்ஸ்மேன் தான் அழைப்பை கொடுக்க வேண்டும். ஆனால் விராட் கோலி வேண்டாம் என்று சொன்னதால் ஜெய்ஸ்வாலுக்கு அங்கே வாய்ப்பு இல்லை.

இதையும் படிங்க: விராட் கோலி செய்த தவறால் சதம் அடிக்காமல் ஏமாற்றத்துடன் வெளியேறிய ஜெய்ஸ்வால் – என்ன நடந்தது?

பதான்: கிரிக்கெட்டில் பந்து பாய்ண்ட் திசைக்கு அடிக்கப்பட்டால் எதிர்ப்புறம் இருக்கும் பேட்ஸ்மேன் தான் ரன் எடுப்பதற்கான அழைப்பை கொடுக்க வேண்டும் என்ற இன்னொரு உண்மை. அதை நிராகரிக்க ஸ்ட்ரைக்கர் பேட்ஸ்மேனுக்கு முழு சுதந்திரம் உள்ளது. சில நேரங்களில் வேண்டாம் என்றும் சொல்லலாம்.
மஞ்ரேக்கர்: ஆனால் இர்பான் நீங்கள் இதைக் கேட்க விரும்பவில்லையெனில் வேறு எதுவுமில்லை. அதனால் இர்பான் பதான் என்ற பெயரில் ரன்கள் எடுக்க எப்படி ஓடுவது என்ற புதிய பயிற்சி கையேடு வெளியிடப்பட வேண்டிய நேரம் வந்து விட்டது என்று நினைக்கிறேன்.

Advertisement