அவரைப்பற்றி நான் பேசியது தவறு. இப்போது ஒதுக்குறேன் அவர் செம டேலன்ட் பேட்ஸ்மேன் தான் – சஞ்சய் மஞ்சரேக்கர் பதிவு

Sanjay
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான இருந்தவர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். 90களில் இந்திய அணிக்காக விளையாடி ஓய்வுபெற்ற பின்னர் வர்ணனையாளராக மாறினார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். கிட்டத்தட்ட இருபது வருடங்களாக வர்ணனை செய்து வரும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பொதுவாக வன்மத்தை கவரும் சார்பாக பேசுவதையே தனது வேலையை கொண்டிருக்கிறார். அதிலும் கடந்த இரண்டு வருடமாக இந்திய வீரர்களை குறைத்து மதிப்பிட்டு பேசியிருக்கிறார்.

Sanjay

- Advertisement -

இந்திய வீரர்கள் என்றாலே மும்பை வீரர் தான் என்பது போல் வர்ணனையில் பேசிக்கொண்டிருப்பார். இதன் உச்சகட்டமாக உலக கோப்பை தொடரின் போது ரவீந்திர ஜடேஜாவை போன்ற ஒரு துண்டு துக்கடா வீரரை தனது அணியில் எடுக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். அதாவது ரவீந்திர ஜடேஜா ஒரு சர்வதேச வீரர்களை அவரால் விக்கெட் வீழ்த்த முடியாது என்று வன்மமாக பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து தனது சக வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே உடன் தேவையில்லாமல் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

மேலும் வர்ணனையின் போது இந்திய அணி ஆடிக்கொண்டு இருந்தாலும் மும்பை வீரர்களுக்கு மட்டுமே சப்போர்ட் செய்து பேசிக்கொண்டிருப்பார். மேலும் ரவீந்திர ஜடேஜா இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தில் புகார் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம் உடனடியாக அவரை ஒரு வருடத்திற்கு வர்ணனை பணியிலிருந்து நீக்கியது. பின்னர் மன்னிப்புக் கடிதம் எழுதி. கெஞ்சிக் கதறி மீண்டும் அந்த பணியில் சேர்ந்து இருக்கிறார்.

Sanjay

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மீண்டும் சேர்ந்தவுடன் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரையும் மோசமான வீரர்கள் என்பது போல் சித்தரித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்து கொண்டிருந்தார். மேலும் ஹர்திக் பாண்டியா ஒரு சரியான பேட்ஸ்மென் கிடையாது அவரால் முற்றிலுமாக பேட்ஸ்மேனாக ஆட முடியாது என்று பேசியிருந்தார். ஆனால் இதற்கெல்லாம் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பதிலடி கொடுத்தனர்.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருவரும் சேர்ந்து 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் வைத்து பட்டையை கிளப்பினார். இதனால் மிரண்டு போன சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பச்சோந்தி போல் தனது நிறத்தை மாற்றிக் கொண்டு என்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொள்கிறேன். இனிமேல் இப்படி பேச மாட்டேன் ஹர்திக் பாண்டியா உண்மையில் நல்ல பேட்ஸ்மேன் தான் என்று ட்வீட் செய்திருக்கிறார். இதற்கு முன்னதாக நான் தேர்வாளராக இருந்தால் இந்திய அணியில் ஜடேஜா மற்றும் பாண்டியா ஆகியோரை தேர்வு செய்திருக்க மாட்டேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement