எவ்ளோ பட்டாலும் திருந்த மாட்டார் போலயே. மீண்டும் இந்திய வீரரை வம்புக்கு இழுத்த சஞ்சய் மஞ்சரேக்கர் – விவரம் இதோ

Sanjay
- Advertisement -

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய அணிக்காக 1987ஆம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை விளையாடியவர். 38 டெஸ்ட் போட்டிகளிலும், 74 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி இரண்டிலும் சேர்த்து மொத்தம் 4000 ரன்கள் அடித்திருக்கிறார். கிரிக்கெட்டிலிருந்து 1996ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவுடன் வர்ணனை செய்யும் பணியில் இறங்கினார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். அப்போதிலிருந்தே தற்போது வரை கிட்டத்தட்ட 24 வருடமாக வர்ணனையாளராக இருக்கிறார்.

Sanjay

- Advertisement -

தனது வாய் மூலம் வன்மமாக வர்ணணை செய்து அவ்வப்போது பல்வேறு பிரச்சினைகளில் மாட்டுவது இவரது வழக்கம். அதிலும், கடந்த மூன்று வருடமாக உச்சத்தில் இருக்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். உலக கோப்பை தொடரின் போது இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை மோசமாக விமர்சித்து, அவரை துண்டு துக்கடா வீரர் என்று கூறினார்.

இதன் காரணமாக கடுப்பான ரவிந்திர ஜடேஜா அடுத்த போட்டியில் அரைசதம் அடித்து மைதானத்திலேயே அவருக்கு பதிலடி கொடுத்தார். மேலும், இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புகாரளித்தார். இதன் காரணமாக அவரை இந்திய கிரிக்கெட் வாரியம் உடனடியாக வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கியது. இந்நிலையில் இந்த முறை sony6 தொலைக்காட்சியில் வர்ணனையாளர் பணியில் மீண்டும் சேர்ந்து விட்டார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

Sanjay

மீண்டும் வந்து ரவீந்திர ஜடேஜாவை சீண்டியிருக்கிறார். ரசிகர் ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் சென்று ,இவரிடம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்திய அணியை தேர்வு செய்ய கேட்டுக் கொண்டிருந்தா.ர் இதனை வைத்து தேர்வு செய்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ரவீந்திர ஜடேஜாவை கழட்டி விட்டுவிட்டு முழுநேர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை தேர்வு செய்தார்.

- Advertisement -

மேலும், நான் இப்படி தேர்வு செய்திருக்கிறேன், ஆனால் விராட் கோலி ரவீந்திர ஜடேஜாவைதான் தேர்வு செய்வார் என்று தெரிவித்திருந்தார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இதை கேலியும் கிண்டலுமாக கூறினார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இதனை கண்ட ரசிகர்கள் கடுப்பாகி இவரை ஏன் மீண்டும் வர்ணனையாளர் பணியில் சேர்த்தீர்கள். கண்டிப்பாக இவரை நீக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பேசியிருந்தனர்.

Sanjay

இவர் கூறியது போலவே விராட் கோலி ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்தார். இந்த போட்டியில் ரவிந்திர ஜடேஜா 10 ஓவர்களில் 63 ரன்கள் விட்டுக்கொடுத்து 25 ரன்கள் சேர்த்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் தொடர்ந்து ரவிந்திர ஜடேஜாவின் மீது வன்மத்தை கக்குவது இவரது வேலையாக இருக்கிறது.

Advertisement