என்னது கோலிக்கும் இவருக்கும் கேப்டன்சியில் பிரச்சனையா ? – மனம்திறந்த சஞ்சய் பாங்கர்

Bangar
- Advertisement -

தோனி இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பின்னர் மூன்று வடிவ கிரிக்கெட்டிற்கும் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் இந்திய அணி ஐ.சி.சி நடத்திய கோப்பைகளை வெல்லவில்லை என்றாலும் முக்கிய தொடர்களை கைப்பற்றி உள்ளது.

Dhoni-kohli

மேலும் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி வரை முன்னேறியது. அந்த தோல்விக்கு பின்னர் வெளியேறிய கோலியின் கேப்டன்சி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. மேலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு கோலி கேப்டனாகவும் டி20 அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக மாற்ற வேண்டும் என்றும் பல கருத்துக்கள் வெளியாகின.

- Advertisement -

ஆனால் கோலியின் முடிவுபடி அவர் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் கேப்டனாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஆனால் கோலியின் கேப்டன்சியின் சுமையைக் குறைக்கவும் அவரின் ஆட்டத்திறன் முன்னேற்றம் அடையவும் அவர் ஒரு வடிவத்திலிருந்து கேப்டன்ஷிப்பை துறக்க வேண்டும் என்று பல முன்னாள் வீரர்களும் தெரிவித்து வருகின்றனர்.

Kohli

இந்நிலையில் ஆகாஷ் சோப்ராவின் யூடியூப் சேனலுக்கு கோலி மற்றும் ரோஹித் குறித்து இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இருவரும் சிறப்பான வீரர்கள் போட்டிகளில் இருவரும் சிறப்பாக விளையாட நினைப்பார்கள்.

- Advertisement -

அதேபோன்று அவர்களுக்கு இடையே கேப்டன்ஷிப்பில் எந்தவிதமான போட்டியும் இல்லை. தங்களது பொறுப்புகளில் கவனமாகவும் சிறப்பாக செயல்படுவது அவர்களின் கடமையாக மாறிவிட்டது. மேலும் ரோகித் சர்மாவிற்கு தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு கிடைத்ததை அடுத்து அவரது பேட்டிங் வேற லெவலில் மாறியது.

Kohli-3

துவக்க வீரராக களமிறங்கியதில் இருந்து மேலும் ரோஹித் அட்டகாசமான செயல்பாட்டை அளித்து வருகிறார். அதுமட்டுமின்றி கோலியும் ஆரம்பகால போட்டிகளில் இருந்து சிறப்பாக விளையாடி வருகிறார் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு இடையே கேப்டன்ஷிப்பில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Advertisement