தோனி 7 ஆம் இடத்தில் இறங்க நானே காரணம். தோல்விக்கும் நானே காரணம் – உண்மையை ஒத்துக்கொண்ட பயிற்சியாளர்

Dhoni

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்த்த நிலையில் நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி வெளியேறியது.

Dhoni-2

தோல்விக்கு முக்கிய காரணம் ஐந்தாம் வரிசையில் அனுபவம் வாய்ந்த வீரராக தோனி களம் இறங்காததே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பண்ட் மற்றும் பாண்டியா ஆகியோர் தோனிக்கு இருக்கும்போது களம் இறங்கியதால் ஆட்டத்தின் சூழல் வேறு விதமானது ஒருவேளை தினேஷ் கார்த்திக் முன் தோனி இறங்கி இருந்தால் பண்ட் மற்றும் பாண்டியா ஆகியோர் ஆட்டம் எழுந்திருக்க மாட்டார்கள் என்றும் தோனி இருந்தால் அவர்களை நல்வழிப்படுத்தி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு திருப்பி இருப்பார் என்றும் அப்போது பேசப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் அரையிறுதிப் போட்டி குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தோனியை ஏழாம் வரிசையில் இறக்க நான்தான் காரணம் அவர் முன்கூட்டியே இறங்க கேட்டுக் கொண்ட போதும் நான் அணியின் நலன் கருதி அவரை அந்த இடத்தில் நான் தான் இறக்கினேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த முக்கியமான நேரத்தில் நானே முடிவெடுத்தேன். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுப்ப வேண்டும் என்பதே அணியின் திட்டம் அதன்படி தோனியை ஏழாம் வீரராக அனுப்ப நானே காரணம் அணி வீரர்களும் கலந்துரையாடி பின்னரே தோனியை அனுப்பினேன். முன்கூட்டியே அனுப்பி இருந்தால் அந்த போட்டியின் முடிவு மாறி இருக்கும் என்பதை தற்போது உணர்கிறேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement