- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனி ஒரு டைப்னா.. விராட் கோலி அப்படியே வேற டைப்.. இருவரது கேப்டன்சி ஸ்டைல் குறித்து – சஞ்சய் பாங்கர் பேச்சு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்தபோது பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர் பணியாற்றியிருந்தார். ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோலி ஆகியோரது தலைமையின் கீழ் இந்திய அணி பல்வேறு முக்கிய வெற்றிகளை பெற்ற வேளையில் அந்த வெற்றிகளில் சஞ்சய் பாங்கரின் பங்கும் இருந்தது என்றால் மிகை அல்ல. அந்த அளவிற்கு அவரது பயிற்சி காலகட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்களின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது.

தோனி, விராட் கோலி கேப்டன்சி :

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டு வந்த வேளையில் ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ் அனைத்து இந்திய வீரர்களுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். அதே வேளையில் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான் வீரர்களும் அந்த அணியில் இடம் பெற்றிருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் கேப்டனாக தோனி மற்றும் விராட் கோலி ஆகியோருடைய ஸ்டைலில் என்ன வித்தியாசம்? என்பது குறித்த சில கருத்துக்களை சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஒரு கேப்டனாக தோனி அணியில் இருக்கக்கூடிய எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை யோசித்து அதற்குள்ளே நுழைந்து தேவையான எல்லா விஷயங்களையும் செய்து அதனை சரி செய்வார்.

அதேபோன்று சுழற்பந்து வீச்சாளர்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்பதை அவர் கற்றுத் தேர்ந்தவர். அதுமட்டுமின்றி ஒரு போட்டியின் எந்த சூழலிலும் பொறுமை இழக்காமல் எதிரணியின் பேட்ஸ்மேன்கள் தவறு செய்யும் வரை காத்திருந்து அதன் பின்னர் தனது பந்துவீச்சாளர்களை வைத்து வெற்றியைத் தேடித் தருவார் அதுதான் தோனியின் ஸ்டைல்.

- Advertisement -

ஆனால் விராட் கோலி அதற்கு முற்றிலும் மாறானவர். ஒரு கேப்டனாக பேட்ஸ்மேன்களை கூடுதல் பொறுப்பு எடுத்து அழைத்துச் செல்வார். அவர் களத்தில் இருக்கும் போது அவருடன் இணைந்து விளையாடும் பேட்ஸ்மேன்களை தனது மிகச் சிறப்பான வழிகாட்டுதலின் மூலம் ரன்குவிக்க வைப்பார். மேலும் ஒவ்வொரு போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க வேண்டும் என்பதை சரியான கோணத்தில் அவர்களுக்கு கூறி அவர்களிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிகொண்டுவருவார்.

இதையும் படிங்க : தோனி அதுக்காக காத்திருப்பாரு.. ஆனா கோலி இறங்கி அடிப்பாரு.. கேப்டன்ஷிப் ஸ்டைல் பற்றி சஞ்சய் பங்கர்

தோனி பவுலர்களை வைத்து இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்திய வேளையில், விராட் கோலி பேட்ஸ்மேன்களை வைத்து ஆதிக்கம் செலுத்தினார் என சஞ்சய் பாங்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -