- Advertisement -
ஆசிய கோப்பை

ஓமன் அணிக்கெதிராக டாஸ் வின் பண்ணா நிச்சயம் இந்திய அணி இந்த முடிவை தான் எடுக்கும் – சஞ்சய் பாங்கர் கருத்து

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற வரும் 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணியானது தங்களது முதல் லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியையும், இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியையும் எதிர்த்து விளையாடி அற்புதமான வெற்றியை பெற்றிருந்தது.

இந்திய அணி டாஸ் வென்றால் இதைத்தான் செய்யும் : சஞ்சய் பாங்கர்

அதனை தொடர்ந்து இந்திய அணி இன்று தங்களது கடைசியில் லீக் ஆட்டத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி அபுதாபி மைதானத்தில் ஓமன் அணிக்கு எதிராக விளையாட காத்திருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி இந்தியர்கள் தற்போது தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி டாஸ் வென்றால் நிச்சயம் முதலில் பேட்டிங்கை தான் தேர்வு செய்யும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் பாங்கர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணியின் டாப் ஆர்டர் தற்போது மிகச் சிறப்பாக இருக்கிறது. எனவே டாப் ஆர்டரை பொறுத்தவரை எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வேண்டிய தேவை இருக்காது.

ஆனாலும் இன்றைய போட்டியின் போது இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தான் தேர்வு செய்யும். ஏனெனில் இந்திய வீரர்களுக்கு போதிய அளவு பேட்டிங் செய்ய இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதிலும் குறிப்பாக துவக்க வீரர்களை தாண்டி சூரியகுமார் யாதவ், திலக் வர்மா போன்ற ஒரு சிலர் மட்டுமே பேட்டிங் செய்யும் வாய்ப்பினை பெற்றனர்.

- Advertisement -

எனவே இந்த ஓமன் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணி டாஸ் வெல்லும் பட்சத்தில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து மிடில் ஆர்டர் வீரர்களுக்கும் பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்க நினைக்கும். அந்த வகையில் இந்த போட்டியின் போது சஞ்சு சாம்சன் முன்கூட்டியே களத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவுக்கு அடுத்து நீங்க இந்த விடயத்தில் கிரேட்.. சூர்யகுமார் யாதவை பாராட்டிய – முகமது கைப்

அதேபோன்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் இரண்டாவது இன்னிங்ஸின் போது பனிப்பொழிவிலும் எவ்வாறு பந்துவீச வேண்டும் என்பதை அறிந்து கொள்ள அது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதனால் இந்திய அணி இன்றைய போட்டியில் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங்கை தான் தேர்வு செய்யும் என சஞ்சய் பாங்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -