டெஸ்ட் போட்டியில் 300 ரன்கள் அடிச்ச ஒருவீரரை 5 வருஷமா உட்கார வச்சிடீங்களே ? – சஞ்சய் பாங்கர் ஆதங்கம்

Bangar
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆனது அடுத்த மாதம் 4-ஆம் தேதி ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் துவங்க உள்ளது. ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து பல்வேறு மாற்றங்கள் அணியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதன்படி புஜாரா 3-வது இடத்தில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கோலி விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் மிடில் ஆடர் வரிசையில் இன்னொரு பேட்ஸ்மேனை சேர்க்க முடியும். அந்த இடத்தை நிரப்புவதற்கு ஏற்கனவே இந்திய அணியில் ராகுல் மற்றும் விஹாரி ஆகியோர் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. ஏனெனில் துவக்க வீரரான கில் காயம் காரணமாக வெளியேற உள்ளதால் அவருக்கு பதிலாக அகர்வால் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இதன் காரணமாக விஹாரி மற்றும் ராகுல் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது இருப்பினும் அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட்டில் விஹாரி பங்கேற்றவர் என்ற காரணத்தினால் அனுபவத்தின் அடிப்படையில் அவருக்கு முன்னிலை அளிக்கப்படும் என்று தெரிகிறது.

karun nair

இந்நிலையில் மிடில் ஆர்டரில் கருண் நாயரை சேர்க்க வேண்டும் என்று வாய்ப்பு கேட்டு தனது ஆதங்கத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மிடில் ஆர்டரில் விஹாரி சேர்க்கப்படுவது நல்ல முடிவுதான் இருப்பினும் கருண் நாயருக்கு அந்த வரிசையில் விளையாட வாய்ப்பு கொடுப்பது சரியாக இருக்கும். ஏனெனில் அவரால் சிறப்பாக செயல்பட முடியும். பல ஆண்டுகளாக அவர் வாய்ப்புக்கு காத்திருக்கிறார் அவருக்கு இந்திய அணி கருணை காட்ட வேண்டும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மிடில் ஆர்டரில் களமிறங்கிய கருண் நாயர் முச்சதம் விளாசி அசத்தியிருந்தார். இந்திய அணி சார்பில் சேவாக்கிற்கு அடுத்து முச்சதம் அடித்த ஒரு வீரரை 5 ஆண்டுகளாக இந்திய அணி ஓரம் கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement