ரிஷப் பண்ட் அடித்த இந்த ஷாட்டை பார்த்து அசந்து போயிட்டேன். வேற லெவல் – முன்னாள் வீரர் வியப்பு

pant 1
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியில் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பண்ட் டி20 போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிறப்பாக விளையாடி வந்த அவர் 21 ரன்களில் எதிர்பாராதவிதமாக ஆட்டமிழந்து வெளியேறினார்.

Pant

- Advertisement -

இருப்பினும் அவர் வேகப்பந்து வீச்சாளர்கள் எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிலும் குறிப்பாக டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் வீசிய ஓவரில் ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் கீப்பர் தலைக்கு மேல் அடித்த சிக்ஸர் போன்று தற்போது இந்த போட்டியிலும் ஆர்ச்சர் வீசிய ஒரு அதிவேக பந்து வீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் செய்து ஒரு சிக்சர் ஒன்றை அடித்தார்.

அந்த ஷாட் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் பண்ட் அடித்த இந்த ஷாட்டை பாராட்டி இந்திய அணியின் முன்னாள் வீரரும், பேட்டிங் பயிற்சியாளரும் சஞ்சய் பாங்கர் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : 140 – 150 கிலோமீட்டர் வேகத்தில் வரும் ஒரு பந்தினை இதேபோன்று சிக்சர் அடிப்பது எல்லாம் கஷ்டமான விடயம். அதிலும் ஜோப்ரா ஆர்ச்சர் மாதிரி ஒரு பவுலருக்கு எதிராக ஆடுவது எல்லாம் பாராட்டத்தக்க ஒன்று. அவரது திறமையை பார்த்து நான் ஆச்சரியத்தில் அசந்து போனேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement