ரோஹித் ஃபார்முக்கு திரும்ப இந்த டெக்னிக் மாற்றதுடன் புதிய இடத்தில் இறங்குனும்.. சஞ்சய் பங்கர் அட்வைஸ் 

Sanjay Bangar 2
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா 5 கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளின் முடிவில் 1 – 1* என்ற கணக்கில் தொடர் சமனில் இருக்கிறது. அந்த சூழ்நிலையில் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற கடைசி 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாட உள்ளது.

அதற்கு கேப்டன் ரோகித் சர்மா முதலில் நன்றாக பேட்டிங் செய்வது அவசியமாகிறது. ஏனெனில் சமீப காலங்களாகவே திணறி வரும் அவர் கடந்த 13 இன்னிங்ஸில் வெறும் ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். மேலும் இந்தத் தொடரில் மிடில் ஆர்டரில் விளையாடும் அவர் முன்பை விட மோசமாக பேட்டிங் செய்வது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் இந்திய அணிக்கு பின்னடைவையும் கொடுத்து வருகிறது.

- Advertisement -

பேட்டிங் கோச் அட்வைஸ்:

இந்நிலையில் ரோகித் சர்மா மீண்டும் ஃபார்முக்கு திரும்ப பேட்டிங் டெக்னிக்கல் சில மாற்றங்களை செய்து 3வது இடத்தில் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எந்த பேட்ஸ்மேன்களுக்கும் இதுவே மந்திரமாக இருக்கும். ரோஹித் சர்மா 2 விஷயங்களை செய்ய வேண்டும் என்று நான் கருதுகிறேன்”

“ஒன்று அவர் 3வது இடத்தில் பேட்டிங்கை செய்ய வேண்டும். ஏனெனில் நம்முடைய பவுலிங்கை பலப்படுத்த வேண்டியுள்ள நாம் கொஞ்சம் கூர்மையும் செய்ய வேண்டியுள்ளது. எனவே ரோகித் கண்டிப்பாக இந்த மாற்றத்தை செய்வார். அதைத் தவிர்த்து உங்களுக்கு நீங்களே கொஞ்சம் முன்னதாக தயாராக வேண்டும். ஏனெனில் கடந்த போட்டிகளில் ரோகித் தாமதமாக விளையாடியது போல் தெரிந்தது”

- Advertisement -

தேவையான மாற்றம்:

“குறிப்பாக அவருக்கு மிகவும் பிடித்த ஃபுல் சாட்டை அடிக்க அவருடைய பேட் நன்றாக முன்னோக்கிச் செல்லவில்லை. பொதுவாக அவர் அந்த ஷாட்டை தவற விட மாட்டார். இது மட்டுமின்றி ரோஹித் சர்மா பேட்டிங் செய்யும் போது சற்று முன்னதாகவே நிலைபெற்றால் அவர் தனது கால்களை முன்னோக்கி எடுத்துச் செல்ல கொஞ்சம் எக்ஸ்ட்ரா நேரம் கிடைக்கும். அதைப் பயன்படுத்தி அவர் நல்ல ஷாட்டுகளை ஆடலாம்”

இதையும் படிங்க: பும்ரா இல்லனா இந்தியா எப்பவோ தோத்துருக்கும்.. இப்போவாச்சும் அந்த 2 பேர் விழிச்சா ஜெய்க்கலாம்.. ரவி சாஸ்திரி பேட்டி

“ஆஸ்திரேலியர்கள் அவருக்கு ஷார்ட் பந்துகளை வீசினார்கள். ஆனால் அதை ரோஹித் பலமுறை தவற விட்டார். அந்த தடுமாற்றத்தை தவிர்த்து தம்முடைய ஃபார்முக்கு திரும்ப ரோகித் சர்மாவுக்கு 2 – 3 ஷாட்டுகள் தேவை” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து நான்காவது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் நகரில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement