பும்ரா மற்றும் சஞ்சனா கணேசன் காதல் மலர்ந்தது எப்படி ? மெஹந்தி மூலம் வெளிப்பட்ட ரகசியம் – விவரம் இதோ

Sanjana

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தென்னிந்திய நடிகையான கேரளாவைச் சேர்ந்த அனுபமா பரமேஸ்வரனை காதலித்து வருவதாக சில காலமாக வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. தொடர் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி போடும் விதமாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் அம்மா எனது மகளுக்கும் கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக கூறினார். இதனையடுத்து பும்ரா அனுபமாவை காதலிக்கவில்லை என்பது உறுதியானது.

Sanjana-2

பின்னர் இந்த ஆண்டு இங்கிலாந்துக்கு இடையிலான டெஸ்ட் தொடரை நான்காவது போட்டியில் பும்ரா விடுப்பு எடுத்துக்கொண்டார். மேலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆட போவதில்லை என்ற செய்திகள் கசிந்தன. ஒரு பக்கம் பும்ரா திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்று வதந்திகள் பரவி வந்தன. பின்னர் வதந்திகள் உண்மையாகும் வண்ணம் ஜஸ்பிரித் பும்ராவுக்கு திருமணம் நடக்க இருப்பது உண்மைதான் என தெரியவந்தது.

இந்த மாதம் 14-15 ஆகிய தேதிகளில் கோவாவில் மிக சிறந்த முறையில் ஜஸ்பிரித் பும்ரா திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. கிரிக்கெட் வர்ணனையாளரான சஞ்சனா கணேசனை ஜஸ்பிரித் பும்ரா திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்த அதிகாரபூர்வமான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் ஜஸ்பிரித் பும்ரா சமீபத்தில் பதிவிட்டார். கொரோனா அச்சம் காரணமான சத்தமே இல்லாமல் மிக எளிமையாக பாதுகாப்போடு திருமணம் நடத்திமுடிக்கப்பட்டது. பும்ராவுக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர்.

Sanjana

இந்நிலையில் பும்ராவும் சஞ்சனா கணேசனும் இணைந்து இருக்குமாறு வந்த புகைப்படத்தில் சஞ்சனா கனேசன் கையில் மெஹந்தி போட பட்டு இருந்தது. அந்த மெஹந்தியில் உள்ளங்கையில் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் லோகோ இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் பும்ராவிற்கும் சஞ்சனா கணேசனுக்கும் காதல் மலர்ந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

- Advertisement -

இவ்வளவு காலம் இவர்களது காதல் சத்தமே இல்லாமல் அரங்கேறி உள்ளதும் தெரியவந்துள்ளது. இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலும் விடுப்பில் உள்ள பும்ரா நேரடியாக அடுத்து மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் பழையபடி களமிறங்குவார் அசத்துவார் என்று நம்பலாம்.