தோனியும் என் கணவர் சோயிப் மாலிக்கும் ஒரே மாதிரி குணமுடையவர்கள் – சானியா மிர்சா கொடுத்த விளக்கம்

Sania

இந்திய அணியில் முன்னாள் கேப்டன் தோனி கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். அவர் ஓய்வு அறிவித்து பத்து நாட்கள் ஆகியும் அவர் குறித்த செய்திகள் வெளியாவதில் எந்த ஒரு ஓய்வும் இல்லை. அந்த அளவிற்கு நாள் ஒன்றுக்கு பல செய்திகள் தோனி குறித்து வந்து கொண்டேதான் இருக்கின்றன.

Dhoni

அந்த வகையில் தற்போது இந்திய நாட்டை சேர்ந்த பிரபல மகளிர் டென்னிஸ் வீராங்கனையும், பிரபல பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக்கின் மனைவியுமான சானியா மிர்சா தற்போது தனது கணவர் மற்றும் தோனிக்கு இடையே உள்ள ஒற்றுமை குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் விவரித்ததாவது :

இந்தியாவில் 2004 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான இரு நாட்டு கிரிக்கெட் தொடர் நடைபெற்றதது. அந்த தொடரில் இந்திய வீரரான மகேந்திரசிங் தோனி தனது சிறப்பான அதிரடி ஆட்டத்தின் மூலம் சதம் அடித்து அசத்தினார். அப்போது எனது கணவர் சோயப் மாலிக் அந்த தொடரில் விளையாடி வரும் சதம் அடித்திருந்தார்.

malik

எனக்கு அப்போதே தெரியும் தோனியின் வரைமுறைகளும், எனது கணவர் சோயப் மாலிக்கின் வரைமுறைகளும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று மேலும் இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் திறமைகளும் ஒரே மாதிரியாக இருந்து இருக்கிறது. இதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.

- Advertisement -

malik 1

அதேபோல இருவரும் நாட்டுக்காக நீண்டநாட்கள் கிரிக்கெட் விளையாடி இருக்கின்றனர். கிட்டத்தட்ட என் கணவர் மாலிக்கும். தோனியும் 16 ஆண்டுகளுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட்டில் அவரவர் நாட்டுக்காக விளையாடி பெருமை சேர்த்துள்ளனர் என்று சானியா மிர்சா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.