இலங்கையின் 70வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான நிடாஸ் டி20 கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது.
நிடாஸ்கோப்பை டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்தியா இலங்கைக்கு இடையேயான 4வது லீக் போட்டியில் 6விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அசத்தியது. இந்த ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னாவின் அதிரடியான ஆட்டம் இந்தியாவை வெற்றிபாதைக்கு அழைத்துச்செல்லவும் உதவியது.
இந்த ஆட்டத்தை தனது வீட்டிலிருந்து ரசித்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா சுரேஷ் ரெய்னா பேட்டிங் செய்துகொண்டிருந்த போது அதை தனது செல்போனில் போட்டோ எடுத்து சமூகவலைத்தளமான டிவிட்டரில் பதிவிட்டு இந்திய அணி வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த டீவியில் எப்போதும் ஏதாவதொரு விளையாட்டு போட்டிகளே அதிகம் ஓடிக்கொண்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனையான இவர் பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவியும் கூட.
Come on boys @BCCI ????????????????♀️????????
Ps- safe to say sports is always on atleast one tv in this house at all times ???? pic.twitter.com/0T5c0X0GG0— Sania Mirza (@MirzaSania) March 12, 2018