தனது மனைவியின் பிறந்தநாளை பாகிஸ்தான் வீரருடன் சேர்ந்து துபாயில் கொண்டாடிய தோனி – வைரலாகும் புகைப்படம்

Sakshi

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இந்திய அணிக்காக 17 வருடங்கள் ஒரு வீரராகவும், 15 வருடங்கள் கேப்டனாகவும் பல சாதனைகள் படைத்து இருக்கிறார். அவருக்கு 2010 ஆம் ஆண்டு தனது தோழி சாக்ஷி சிங்குடன் திருமணம் ஆனது. இருவருக்கும் ஐந்து வயதில் ஜிவா என்ற மகள் இருக்கிறார்.

தோனிக்கு 39 வயதாகிறது. அவரது மனைவி சாக்ஷி சிங் நேற்று தனது 32வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் தோனி அவருடைய மனைவி சாக்ஷி, அவருடைய மகள் அவருடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் இருந்தனர். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் சாக்ஷி, மேலும் பிறந்தநாள் கொண்டாடிய கையோடு அவர் ஒரு வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோவில்… எப்போதுமே அமைதியானவர் ஆக இருக்கும் தோனியின் மனநிலையை சோகமானதாக என்னால் மாற்ற முடியும். ஏனெனில் அவருக்கு நெருக்கமான ஒருவராக இருக்கிறேன்.

sakshi

நாங்கள் வீட்டில் கிரிக்கெட் பற்றி பேசவே மாட்டோம். நானும் அதுபற்றி அவரிடம் கேட்டுக் கொள்ள மாட்டேன். எனது மகளுக்கும் அவர் சொல்வதுதான் பெரும் சொல் அதில் மாற்றுக்கருத்து இருக்காது சொல்வதை அப்படியே செய்து விடுவார் ஜிவா. தோனி வைத்திருந்த நீண்ட முடி எனக்கு பிடிக்காது. அதே நேரத்தில் டோனி தான் எனக்கு முக்கியம் அவருக்கு கிரிக்கெட் முக்கியம் என்று தெரிவித்திருக்கிறார் சாக்சி.

- Advertisement -

Sania

கடந்த 10ஆம் தேதி ஐபிஎல் தொடர் முடிவடைந்துவிட்டது ஆனாலும் தற்போது வரை தோனி தனது குடும்பத்துடன் துபாயில் உள்ளார். நேற்று தனது மனைவியின் 32வது பிறந்த நாளைக் கொண்டாடிய தோனி அங்கு இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் அவரது கணவரான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் உடன் இணைந்து இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்தியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.