2011ல் தோனி உலககோப்பையை ஜெயிக்க இதுவும் ஒரு காரணமாக அமைந்தது – சங்ககாரா வெளியிட்ட ரகசியம்

Sanga
- Advertisement -

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் இலங்கை அணிகள் முன்னேறியது. இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுவதாலும், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இறுதிப்போட்டியில் மோதுவதாலும் இந்த போட்டி அரங்கம் நிறைந்து கோலாகலமாக நடைபெற்றது. அப்போது டாஸ் போடுவதற்கு முன்னர் ஒரு சில சர்ச்சைகள் அரங்கேறியது.

2011 worldcup

சர்ச்சைகள் என்று சொல்வதைவிட அவைகள் குழப்பங்கள் தான். இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் உடன் நேரலையில் உரையாடிய குமார் சங்ககாரா உலக கோப்பை நினைவுகளை பகிர்ந்து கொண்டார் . அப்போது பேசிய அவர்… 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்திருந்தனர். கரகோசங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். மிகவும் கூச்சலாக இருந்தது.

- Advertisement -

விக்கெட் கீப்பராக இருக்கும் என்னால் ஸ்லிப்பில் அருகில் நிற்கும் பீல்டருடன் கூட பேச முடியாது. அந்த அளவிற்கு கூட்டம் இருக்கும். அவ்வளவு சத்தம் ரசிகர்கள் கொடுத்த ஆரவாரத்தில் இருந்தது. அந்த இறுதிப்போட்டியில் நான் தான் டாஸ் சுண்டினேன். அப்போது நான் என்ன கேட்டேன் என்பது தோனியின் காதில் விழவில்லை. நீங்கள் ‘டெய்ல்’ என்று சொன்னீர்களா என்று தோனி கேட்டார். அதற்கு நான் ‘ஹெட்’ என்றேன்.

toss

அப்போது போட்டி நடுவர் நான்தான் டாஸ் ஜெயித்ததாக கூறினார். அதற்கு தோனி மறுப்பு தெரிவித்தார். அப்போது குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பத்தை தீர்க்கும் விதமாக மீண்டும் ஒருமுறை டாஸ் போடலாம் என்றார் தோனி. இந்தமுறையும் அதிர்ஷ்ட வசமாக டாஸை நானே வென்றேன். ஒருவேளை இந்திய வென்றிருந்தால் அந்த அணி பேட்டிங் பிடித்திருக்கும் போலிருக்கிறது என்று கூறினார் அவர்.

- Advertisement -

இந்த உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்று 28 ஆண்டுகளுக்குப் பின்னர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் மகேந்திர சிங் தோனி ஆட்டநாயகன் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்காக இரண்டாவது முறை 50 ஓவர் உலககோப்பையை கைப்பற்றி கொடுத்த கேப்டனாக தோனியின் பெயர் பதிவானது.

sanga

மேலும் அதுவரை தோனியை சாதாரணமாக பார்த்தவர்கள் அனைவரும் அவரை ஒரு வெற்றிகரமான கேப்டனாக பார்க்க ஆரம்பித்தார்கள். மேலும் அதனைத்தொடர்ந்து தோனி தொட்டதெல்லாம் வெற்றி தான் என்பது போல அடுத்தடுத்து வெற்றிகளை கைப்பற்றினார். இந்திய கேப்டனாக அவர் ஐ.சி.சி சார்பில் நடத்தப்பட்ட அனைத்து தொடர்களையும் கைப்பற்றி கொடுத்த வெற்றிகரமான இந்திய கேப்டன் என்ற பெருமையும் படைத்தார்.

தற்போது தனது கிரிக்கெட் வாழ்வின் இறுதி கட்டத்தில் இருக்கும் அவர் ஓய்வை அறிவிக்கவில்லை என்றாலும் அவரது ஓய்வு குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகினாலும் தோனி குறித்த பல்வேறு முன்னாள் வீரர்களின் அனுபவங்கள் நாள்தோறும் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் தோனி என்பது ஒரு வீரர் என்று அல்லாமல் அது உணர்ச்சிகரமான வார்த்தையாக மாறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement