- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இலங்கை அணிக்கு எதிராக இவர் கடுமையான நெருக்கடியை கொடுப்பார் – சங்கக்காரா வெளிப்படை

அண்மையில் வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி நாடு திரும்பியது. அதன்பின்னர் அடுத்ததாக இந்திய அணியானது இலங்கை அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரானது வரும் ஜனவரி 3-ஆம் தேதி முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்திற்கான 2 வகையான இந்திய அணியையும் அண்மையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ தங்களது அதிகாரபூர்வமான டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இதில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் பல இளம்வீரர்கள் இடம்பெற்றது மட்டுமின்றி அந்த அணியின் கேப்டனாக ஹார்டிக் பாண்டியா செயல்படுவார் என்றும் அறிவித்திருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் மீண்டும் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தப்போகும் ஹார்டிக் பாண்டியா குறித்து இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆன குமார் சங்ககாரா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

திடீரென ஒரு அணியின் கேப்டன்ஷிப்பை மாற்றுவது, புதிய கேப்டனின் கீழ் விளையாடுவது என்பது எப்போதுமே ஒரு கிரிக்கெட் அணிக்கு சவாலாகத்தான் இருக்கும். ஆனால், ஹர்திக் பாண்ட்யா மிக எளிதாக தனது புதிய கேப்டன் பொறுப்பை கையாள்வார் என்று கருதுகிறேன். கேப்டன்ஷிப் மாற்றம் என்பது கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாதது.

- Advertisement -

அதற்கு அனைத்து வீரர்களின் ஒத்துழைப்பும் அவசியம். நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற வலுவான அணிகள் கேப்டன்ஷிப் மாற்றத்தின்போது சிக்கல்களை சந்தித்துள்ளன. ஆனால், ஹர்திக் பாண்ட்யாவிடம் கேப்டனுக்கான அனைத்து தகுதிகளும் உள்ளன. இளம் வீரர்களை ஒருங்கிணைத்து இலங்கை அணிக்கு கடுமையான நெருக்கடியை அவர் கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன் என சங்கக்காரா கூறியுள்ளார்.

இதையும் படிங்க : 2022ஆம் ஆண்டில் இந்திய அணியிலிருந்து மறைந்து வெகு தூரம் சென்ற 5 கிரிக்கெட் வீரர்கள் – லிஸ்ட் இதோ

ஏற்கனவே நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் முதன்முறையாக கேப்டன் பொறுப்பினை ஏற்ற ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி சாம்பியன் பட்டத்தினை கைப்பற்றியதில் இருந்து அவர் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட வேண்டும் என்கிற குரல்கள் வலுத்து வரும்வேளையில் ரோஹித்துக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டன் பாண்டியாதான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by