தோனி எல்லா கோப்பையும் ஜெயிச்சி கொடுத்தாரு தான். ஆனால் அதற்கு விதைபோட்டது இவர்தான் – சங்கக்காரா ஓபன் டாக்

- Advertisement -

இம்மாத துவக்கத்தில் ஜூலை 7ஆம் தேதி தோனி தனது பிறந்த நாளையும், எட்டாம் தேதி கங்குலி தனது பிறந்த நாளை கொண்டாடினார்கள். இதனையொட்டி சங்கக்காரா, கவுதம் கம்பீர் மற்றும் கிரேம் ஸ்மித் போன்ற நட்சத்திர வீரர்களை வைத்து தோனி மற்றும் கங்குலி ஆகியோரின் கேப்டன்ஷிப் பண்புகளைப் பற்றிய விவாத நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தது.

Ganguly-dhoni

- Advertisement -

இதில் கலந்து கொண்ட மூவரும் இரு வீரர்களுக்கும் இடையே உள்ள கேப்டன்சி ஒற்றுமைகள் மற்றும் வித்தியாசங்கள் என பலவற்றை பற்றி கலந்துரையாடினார். தோனி தலைமையிலான இந்திய அணி 2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வென்று சாதனை படைத்தது.

இவைகளுக்கெல்லாம் அச்சாணியாக இருந்து இந்திய அணி வெளிப்படுத்திய அற்புதமான ஆட்டத்திற்கு கங்குலிதான் காரணம் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தென் ஆப்பிரிக்க வீரர் கிரேம் ஸ்மித் கூறியதாவது : கங்குலி கேப்டன்சியை விட தோனியின் கேப்டன்சி சிறந்தது என்று நான் நினைக்கிறேன்.

Ganguly

ஏனெனில் நடுவரிசையில் கேப்டனாக தான் என்று நின்று விளையாடினால் மட்டுமே இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும் என்று அதனை ஏற்றுக் கொண்டு முழுமையாக அதனை செய்து முடித்துள்ளார். இப்படிப்பட்ட திறனை பார்க்கும் பொழுது தோனி சிறந்தவர் என்று தான் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் சங்கக்காரா கூறுகையில் : இந்திய அணி இன்று இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் அதற்கு கங்குலி காரணம்.

- Advertisement -

தோனி தலைமையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றினாலும் இவர்களுக்கெல்லாம் விதையாக அமைந்தது கங்குலி தான் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய கம்பீர் கூறுகையில் : தோனி மற்றும் கங்குலி இருவரின் பங்களிப்பு இந்திய அணிக்கு பெரும் பங்காற்றியுள்ளது உண்மைதான். ஆனால் தோனியை மட்டும் பற்றி பேச விரும்புகிறேன். ஏனெனில் இந்திய அணி முழுமையான வளர்ச்சிபெற தோனி கடினமாக உழைத்தார்.

Ganguly

இருப்பினும் அதில் கங்குலியின் பங்கு அதிகம் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் கடைசிப் பகுதியை பேசிய சங்கக்காரா : கடைசி வரை போராடி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு கூட்டிச் செல்வது கடினமானது. ஆனால் ஆனால் அந்தக் கடினமான வேலையை ஏற்றுக் கொண்டு தோனி ஒருநாள் போட்டிகளில் வெற்றி தேடித்தந்தார் என்றால் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றதற்கு கங்குலி தான் காரணம் என்று தான் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement