இவர்தான் தற்போதைய உலகின் சிறந்த பேட்ஸ்மேன். சிறந்த பவுலர் – சங்கக்காரா கணிப்பு

- Advertisement -

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் நேரலையில் முன்னாள் வீரர் ஒருவருடன் பேசிய குமார் சங்ககாரா பல்வேறு விஷயங்களை பற்றி பேசினார். தற்போது கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் தாமதிக்காமல் விராட் கோலி என்று கூறினார் குமார் சங்ககாரா.

kohli 2

- Advertisement -

விராட் கோலி தற்போது இந்திய கேப்டனாக இருக்கிறார். 2014 ஆம் ஆண்டிலிருந்து டெஸ்ட் கேப்டன் பதவியையும், 2017 ஆம் ஆண்டிலிருந்து ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பதவியில் இருந்து வருகிறார். தற்போது வரை 86 டெஸ்ட் போட்டிகளில் 7,740 ரன்களும், 248 ஒருநாள் போட்டிகளில் 11,867 ரன்களும் 82 டி20 போட்டிகளில் 2,796 ரன்கள் குவித்துள்ளார்.

மொத்தமாக சேர்த்து 71 சதங்களும் டி20 போட்டிகளில் 24 அரை சதங்களும் அடித்துள்ளார். தற்போது வரை சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை முறியடித்துள்ளார் விராட் கோலி. பல சாதனைகளை முறியடித்த விராட் கோலி தற்போதுவரை இரட்டை சதத்தை மட்டும் ஒருநாள் போட்டிகளில் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Kohli-2

ஆனால் வரும் காலங்களில் கோலி அந்த சாதனையையும் தகர்ப்பார் என்று அடித்துக் கூறலாம்.
சர்வதேச அளவில் தற்போது வரை கிட்டத்தட்ட 22 ஆயிரம் ரன்களை குவித்து விட்டார். விராட் கோலி
மேலும், ஒரு நாள் போட்டிகளில் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தையும் டெஸ்ட் போட்டிகளின் தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்தையும் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.

Bumrah

அதேபோன்று பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் நாதன் லயன் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள். அதேபோன்று அனைத்து சூழ்நிலையிலும் சிறப்பாக பந்துவீச கூடிய திறமை வாய்ந்தவர்களாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மற்றும் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் ஆகியோர் திகழ்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement