இந்திய பவுலரான இவரது பந்துவீச்சுக்கு பயந்து எத்தனையோ நாள் தூங்காமல் இருந்திருக்கேன் – சங்ககாரா ஓபன்டாக்

இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும், முன்னாள் கேப்டனுமான சங்கக்காரா 2000வது ஆண்டில் கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமாகி 2015ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் சிறப்பான வீரராக விளையாடியுள்ளார். இலங்கை அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் இவர் 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12,400 ரன்களையும், 404 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14234 ரன்களையும் 56 டி20 போட்டிகளில் விளையாடி 1382 ரன்களையும் குவித்துள்ளார்.

Sangakkara

சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் சங்கக்காரா தான் எதிர்கொண்ட பந்துவீச்சாளர்களில் தன் தூக்கத்தை தொலைத்த இந்திய பவுலர் குறித்து தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னுடைய நீண்ட கரியரில் நான் பார்த்து பயந்த சில பந்துவீச்சாளர்களில் இந்திய அணியின் லெஜண்டரி சுழற்பந்து வீச்சாளரான அணில் கும்ப்ளேவும் ஒருவர்.

- Advertisement -

அவரது பந்து வீச்சிற்கு அஞ்சி நான் பல இரவுகள் தூக்கத்தைத் தொலைத்துள்ளேன். கும்ப்ளே ஒரு சாதாரணமான ஆர்த்தடாக்ஸ் ஸ்பின்னர் கிடையாது. அவரது பந்து வீச்சில் இருக்கும் ஹை ஆர்ம் ஆக்ஷன் மற்றும் வேரியேஷன்கள் ஆகியவைகள் மிக சிறப்பாக இருக்கும். அவருடைய பந்து வீச்சில் வேகமும், லைன் எப்பொழுதும் மிகச் சரியாக இருப்பதால் அவ்வளவு எளிதில் அவரது பந்துவீச்சு ரன்களை எடுக்க முடியாது.

Kumble

மேலும் அவரது பந்துவீச்சில் பவுன்ஸ் கொஞ்சம் அதிகமாக இருப்பதால் பேட்ஸ்மேன்கள் அவரது பந்து வீச்சில் விளையாட கஷ்டப்படுவார்கள் என்று சங்கக்காரா கூறியுள்ளார். ஏற்கனவே இலங்கை அணியின் மற்றொரு ஜாம்பவானான ஜெயவர்த்தனே அணில் கும்ப்ளே குறித்து கூறுகையில் : கும்ப்ளே பந்துவீசும் போது அவருடைய பலம் என்னவென்று அவருக்கு நன்றாக தெரியும் எனவே பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க விடாமல் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருப்பார்.

- Advertisement -

kumble 1

அவரது திட்டங்கள் அனைத்தும் தெளிவாக இருக்கும் என்று ஜெயவர்த்தனாவும் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அதனை தொடர்ந்து சங்ககாராவும் கும்ப்ளேவை பாராட்டி பேசியுள்ள இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement