கோலியை நம்ப வேண்டாம்.! இந்திய அணிக்கு அறிவுரை கூறிய சங்ககாரா.!

- Advertisement -

இந்திய அணியினை பற்றி சில நாட்களாகவே பலரும் பல கருத்தை முன்வைத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இலங்கையை சேரந்த முன்னாள் அதிரடி வீரர் குமார் சங்கக்காரா கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். இந்தியா அடுத்தடுத்த தோல்விகளால் அனைத்து திசையில் இருந்தும் விமர்சனங்களை பெற்றுவருகிது. தற்போது சங்கக்காராவும் தன் தரப்பிற்கு கருத்தினை பதிவு செய்ய அதுவும் வைரலாக பரவி வருகிறது.

sanga

- Advertisement -

பேட்டியில் சங்கக்காரா கூறியது: விராட் கோலியை மட்டும் இந்திய அணி நம்பியுள்ளது என்று கூற தனக்கு பிடிக்கவில்லை. மேலும் முழு பேட்டிங் அழுத்தமும் கோலியை மட்டுமே சுற்றி உள்ளது. இந்திய அணியில் திறமைவாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர். குறிப்பாக ரஹானே வெளிநாட்டு தொடர்களில் 50 ரன்களுக்கு மேல் சராசரி விகிதத்தை வைத்துள்ளார்.அவரும் இந்த தொடரில் சோபிக்க வில்லை.

மேலும் டெஸ்ட் வடிவத்தில் மட்டுமே கவனத்தை செலுத்தி ஆடிவரும் புஜாரா அவரும் டெஸ்ட் போட்டிகளில் 50 ரன் சராசரி வைத்துள்ளார் அவரும் இத்தொடரில் சிறப்பாக விளையாடவில்லை. மேலும் ராகுல் தினேஷ் கார்த்திக் மற்றும் தவான் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தும் இந்திய அணி இந்த சரிவினை சந்தித்துள்ளது சற்று வருத்தத்தை தருகிறது.

virat-kohli-and-team

தற்போது உள்ள வீரர்களில் உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி என்பதில் சந்தேகம் இல்லை எனவும் கோலியுடன் சிறிது காலம் தான் பழகியுள்ளதாகவும், கோலி பழகுவதற்கு மிகவும் அன்பானவர் மற்றும் எளிமையானவர் என்றும் கோலியின் பேட்டிங் மட்டுமின்றி கேப்டன்சியும் தனக்கு பிடிக்கும் என்று இப்பேட்டியில் குமார் சங்கக்காரா கூறியுள்ளார்.

Advertisement