நாங்க விளையாடுறதே வருஷத்துக்கு ஒருமுறை தான். அதுவும் இந்த வருஷம் இல்லையா – ஆதங்கமாக பேசிய இந்திய வீரர்

srh
- Advertisement -

கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் தற்போது மார்ச் 29ஆம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கு அடுத்தும் இந்த தொடர் நடை பெறுவது சந்தேகம்தான் என்று தெரிகிறது. இந்தியாவில் மக்களின் இயல்புவாழ்க்கை திரும்பவே இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் அடுத்த சில மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டி என்பது கிடையாது என்றே தோன்றுகிறது.

Ipl cup

- Advertisement -

உலகின் மிகப்பெரிய தொடரான ஐபிஎல் தொடர் தற்போது நடைபெறுமா ? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தற்போது இந்த நீண்ட கால இடைவெளி ஆட்டத்திறன் பாதிக்கும் என சன்ரைசர்ஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா தெரிவித்துள்ளார் .இதுகுறித்து சந்தீப் சர்மா கூறுகையில் :

ஆண்டிற்கு ஒரு முறைதான் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறோம். அவ்வாறு இந்த தொடர் இந்த ஆண்டு நடைபெறாவிட்டால் மிகப்பெரிய இடைவெளி விழும். இதுபோன்ற நீண்ட இடைவெளியில் உடற்பயிற்சி மற்றும் உடற்தகுதி வீரர்களுக்கு மிகவும் முக்கியமானது. உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல முடியாததால் நான் என் வீட்டிற்குள்ளேயே முடிந்த அளவிற்கு உடற்பயிற்சிகளை செய்து வருகிறேன்.

Sandeep sharma

மேலும் அவ்வப்போது என் சகோதர்களுடன் தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். அதுமட்டுமின்றி காலை மாலை என ரன்னிங் செல்வதுடன் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கான அனைத்து செயல்களையும் வீட்டிலிருந்தவாறே செய்து வருகிறேன். இதுபோன்ற நீண்ட இடைவெளி பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமல்ல பேட்ஸ்மேன்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

- Advertisement -

இந்த லாக்டவுனுக்கு பிறகு பயிற்சியின் மூலம் மீண்டும் நாம் பழைய நிலைக்கு திரும்புவது என்பது சவாலான விடயம். ஏனெனில் தொடர்ச்சியான பயிற்சியின் மற்றும் டச்சில் இருக்கும்போதே நம்முடைய திறமை தொடர்ந்து வரும் இதுபோன்ற நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரும்புவது என்பது மிகவும் கடினமான காரியம் தான்.

Srh

இருப்பினும் தற்போதுள்ள சூழலில் மக்கள் நலனே முக்கியம் என்ற காரணத்தினால் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் பத்திரமாக இருக்கும்படியும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் நுழையும் வாய்ப்புக்காக ஐ.பி.எல் தொடரை எதிர்நோக்கி இருந்த பல இளம் வீரர்களுக்கு இந்த தொடர் நடக்காவிட்டால் அது மிகப்பெரிய இழப்பை அவர்களுக்கு தரும் எனபதே உண்மை.

Advertisement