- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ராணாவுக்கு மட்டும் தொடர்ந்து கம்பீர் வாய்ப்பு வழங்குவது ஏன்? பின்னணியை பகிர்ந்த சந்தீப் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் 2024 முதல் செயல்பட்டு வருகிறார். அவருடைய வழிகாட்டுதலில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அசத்தி வரும் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் திண்டாடி வருகின்றது. குறிப்பாக சொந்த மண்ணில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா அடுத்தடுத்த வருடங்களில் 2 ஒயிட்வாஸ் தோல்விகளை சந்தித்து மோசமான சாதனை படைத்துள்ளது.

அது ஒரு புறமிருக்க பயிற்சியாளராக கௌதம் கம்பீர் சில வீரர்களுக்கு மட்டும் ஒருதலைபட்சமாக வாய்ப்பு வழங்கி வருவது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக 2024 ஐபிஎல் கோப்பையை கௌதம் கம்பீர் வழிகாட்டுதலில் கொல்கத்தா வெல்வதற்கு ஹர்ஷித் ராணா முக்கிய பங்காற்றினார். அந்த ஒரே காரணத்துக்காக இந்திய அணியின் பயிற்சியாளராக வந்தது முதல் அவருக்கு 3 வகையான அணியிலும் கம்பீர் வாய்ப்புகளை அள்ளி வழங்கி வருகிறார்.

- Advertisement -

ராணாவுக்கு மட்டும் சலுகை:

அந்த வாய்ப்பில் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் சிட்னியில் நடைபெற்ற போட்டியிலும் நேற்று முன்தினம் ராஞ்சியில் நடைபெற்ற போட்டியிலும் அவர் தலா 3 விக்கட்டுகளை சாய்த்தார். அதை தவிர்த்து பெரும்பாலான போட்டிகளில் இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்த ராணாவை பலரும் விமர்சித்தனர். அதைப் பற்றி கேட்டதற்கு 23 வயது குழந்தை ராணாவை விமர்சிப்பது வெட்கக்கேடானது என்று கௌதம் கம்பீர் பதிலடி கொடுத்தார்.

அதைப் பார்த்த ரசிகர்கள் ராணாவுக்கு மட்டும் கம்பீர் இவ்வளவு ஆதரவளிக்க என்ன காரணம்? என்ற கேள்வியை எழுப்புகின்றனர். இந்நிலையில் கொஞ்சம் உயரமாக இருக்கும் ஹர்ஷித் ராணா 140 கி.மீ வேகத்தில் பந்து வீசும் திறமையை கொண்டுள்ளதாக இந்திய வீரர் சந்தீப் சர்மா தெரிவித்துள்ளார். அதனாலேயே தொடர்ந்து வாய்ப்பளித்தால் நல்ல பவுலராக வருவார் என்ற நம்பிக்கையுடன் அவருக்கு கம்பீர் ஆதரவளிப்பதாக சந்தீப் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

விளக்கிய சந்தீப்:

இது பற்றி சந்தீப் பேசியது பின்வருமாறு. “ஒருவரிடம் நீங்கள் திறமையைக் கண்டறிய முயற்சிப்பீர்கள். ஒருமுறை திறமையைக் கண்டறிந்து விட்டால் அந்த வீரருக்கு நீங்கள் முதிர்ச்சி பெறுவதற்குத் தேவையான நேரத்தைக் கொடுக்க வேண்டும். அதுவே ராணா விஷயத்தில் நடக்கிறது. நல்ல உயரத்தையும் கட்டமைப்பையும் கொண்டுள்ள அவர் 140 கி.மீ வேகத்தில் பந்துகளை வீசுகிறார்”

இதையும் படிங்க: விராட், ரோஹித் பாராட்டுக்காக இதை பண்றதில்ல.. இந்தியாவின் அந்த நலனுக்காக உதவுறாங்க.. ஃகைப் பேட்டி

“எனவே அவருடன் நீங்கள் 2 வருடம் வேலை செய்தால் அவர் மிகவும் நல்ல பவுலராக வருவார். நீங்கள் ராணாவைப் போன்ற 5 வீரர்களை தேர்ந்தெடுத்து வாய்ப்பளித்தால் அதில் ஓரிருவர் மட்டுமே நன்றாக வருவார்கள். 3 – 4 பவுலர்கள் உங்களுடைய கணிப்பைத் தவறாக்க வாய்ப்புள்ளது. அதனாலேயே சரியான பவுலர்களை கண்டறிவது தேர்வாளர்களுக்கு மிகவும் கடினமான வேலையாகும். 23 – 24 வயதாகும் ராணா விளையாடி அடி வாங்கினால் தான் வளர்வார்” என்று கூறினார்.

- Advertisement -