- Advertisement -
ஆசிய கோப்பை

அபிஷேக் சர்மாவுக்கு இந்திய அணி கொடுக்கும் அந்த சுத்ததந்திரம் தான் அவரோட சக்ஸசுக்கு காரணம் – ஜெயசூரியா பாராட்டு

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர இளம் துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா மிகச்சிறப்பான ஃபார்மை வெளிப்படுத்தி வருவது பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்று வருகிறது. கடந்த ஆண்டு ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து புதிய துவக்க வீரருக்கான இடத்தினை பிடித்த அபிஷேக் ஷர்மா தற்போது அதனை நிரந்தரம் ஆக்கியுள்ளார்.

அபிஷேக் சர்மா நேச்சுரல் கேமை விளையாடுறார் : சனத் ஜெயசூர்யா

கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் பவர்பிளே ஓவர்களில் அவர் கொடுக்கும் அதிரடியான துவக்கம் இந்திய அணியின் வெற்றிக்கும் உதவி வருவதால் அவர் எதிர்கால இந்திய அணியின் நட்சத்திர வீரராகவும் பார்க்கப்பட்டு வருகிறார். சூப்பர் ஃபோர் சுற்றின் கடைசி மூன்று ஆட்டங்களிலும் அரைசதம் கடந்த அவர் பல்வேறு சாதனைகளை இந்த தொடரில் நிகழ்த்தி அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாட இருக்கும் அபிஷேக் சர்மாவை தற்போது இலங்கை அணியின் பயிற்சியாளரான சனத் ஜெயசூர்யா பாராட்டி பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

அபிஷேக் ஷர்மா அவருடைய இயல்பான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். அதற்கு நிர்வாகமும் முழு சுதந்திரம் கொடுத்துள்ளது. அதனாலேயே அவரால் இவ்வளவு சிறப்பாக விளையாட முடிகிறது. அதிலும் குறிப்பாக அவர் இப்படி சுதந்திரமாக விளையாடும் பட்சத்தில் அவரால் எளிதாக ரன்களை வேகமாக குவிக்க முடிகிறது. அதனாலே தொடர்ந்து அவர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி தேவையானபோது அவரால் ஆட்டத்தை நிலைப்படுத்தியும் விளையாட முடிகிறது. பவர்பிளே ஓவர்களுக்கு பின்னர் பெரிய இன்னிங்க்ஸை விளையாட நினைத்தால் அவர் மிகச் சிறப்பாக அதனை கட்டமைத்து விளையாடுகிறார். அவரது பயமற்ற ஆட்டம் எதிரணிகளை பயமுறுத்தும் வகையில் இருக்கிறது.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

இந்திய அணியின் நிர்வாகம் அவருக்கு கொடுத்திருக்கும் பேட்டிங் சுதந்திரம் தான் அவரது அதிரடிக்கு மிகப்பெரிய காரணியாக இருக்கிறது. அதனாலே அபிஷேக் ஷர்மா தற்போது மிகப்பெரிய வீரராக உருவெடுத்திருக்கிறார் என ஜெயசூர்யா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -