இந்திய குடியுரிமை சட்ட மசோதாவை நேரடியாக எதிர்த்த கங்குலியின் மகள் – வைரலாகும் பதிவு

Sana-1

இந்திய குடியுரிமை சட்ட மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. பாஜக அரசு இந்திய குடியுரிமை சட்ட மசோதாவை மும்முரமாக செயல்படுத்தி வருகிறது. இந்த சட்ட மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த தலைவர்கள் குரலெழுப்பி வருகின்றனர்.

cab

மேலும் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் ஜாம்பியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் என பலரும் போராட்டத்தில் குதிக்க இந்த போராட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்து மிக தீவிரமாக உருவெடுத்து தற்போது இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு பெற்றுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும் இந்த போராட்டத்தில் இறங்கி வருகின்றனர். மேலும் பல இந்தியா முழுவதும் பல இளைஞர்கள் வீதிக்கு வந்து போராட ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்க்கும் விதமாக கங்குலியின் மகள் சனா ஒரு பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார். பல்வேறு பிரபலங்களும் மௌனமாக இருக்கும் நிலையில் கங்குலியின் மகள் தைரியமாக ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அதில் 2003 ஆம் ஆண்டு வெளியான “தி எண்ட் ஆஃப் இந்தியா” என்ற புத்தகத்தின் சில வரிகளை அவர் பதிவிட்டுள்ளார். அந்தப் புத்தகங்கள் குறிப்பிடபட்ட வார்த்தைகளின் அர்த்தங்கள் தமிழில் இதோ உங்களுக்காக :

sana

இன்று நான் முஸ்லிம் அல்ல, கிறிஸ்தவன் அல்ல என்று சந்தோஷம் கொள்ளும் நபர்களே “நீங்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள்” என்பதனை உணர வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உங்களை அடக்குமுறைக்குள் விரைவில் கொண்டு வருவார்கள். பெண்கள் அணியும் பாவாடை இப்படித்தான் இருக்கவேண்டும். இறைச்சி சாப்பிடக் கூடாது, மது அருந்தக் கூடாது ,வெளிநாட்டு படங்களை பார்க்க கூடாது, யாத்திரையை செல்லக்கூடாது, இந்த பற்பசையைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுவார்கள்.

- Advertisement -

பொது இடங்களில் கை கொடுக்கக்கூடாது, முத்தம் கொடுப்பதற்கு பதிலாக ஜெய் ஸ்ரீராம் என்று முழங்க வேண்டும். மேலும் ஒவ்வொருவரும் இங்கு பாதுகாப்பாக இருக்க முடியாது. இந்தியாவை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள இதை உணர வேண்டும் என்று அந்த வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வரிகளை அப்படியே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கங்குலி தலையிட்டு இந்த பதிவு தற்போது டெலிட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.