கங்குலியின் மகள் இவ்வளவு வளந்துட்டாரா ? – வைரலாகும் புகைப்படம்

Sana

பிசிசிஐ-யின் புதிய தலைவராக பதவியேற்ற கங்குலிக்கு அனைத்து தரப்பில் இருந்தும் அமோக வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது. இதனை தொடர்ந்து இந்தியாவில் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடத்தி வைத்து அனைவரது பாராட்டையும் பெற்றார் சவுரவ் கங்குலி

View this post on Instagram

Her sloth bear ..❤️

A post shared by Sana ganguly (@sanaganguly) on

இந்நிலையில் கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது, இந்த போட்டியின் போது எடுத்த புகைப்படத்தை சவுரவ் கங்குலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த பதிவை கண்ட ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை பகிர்ந்த வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் இந்த பதிவை கண்ட அவரது மகள் சனா கங்குலி நீங்கள் விரும்பாதது என்ன என்று கேள்வி கேட்டார். அதற்கு நீ யாருக்கும் கீழ்ப்படியாமல் இருப்பதே நான் விரும்பாதது என்று பதிலளித்தார். உடனே அந்த பதிலை கண்ட அவரது மகள் இவை எல்லாம் உங்களிடம் இருந்துதான் நான் கற்றுக்கொண்டேன் என்று கேலியான பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

இந்நிலையில் கங்குலி மகளின் இந்த பதிலையும் அவரது புகைப்படத்தையும் கண்ட நெட்டிசன்கள் கங்குலியின் மகள் இவளவு வளர்ந்துட்டாரா என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர். 2001 ஆம் ஆண்டு பிறந்த சனா கங்குலிக்கு தற்போது 18 வயதாவது குறிப்பிடத்தக்கது.