திருவனந்தபுரத்தில் போட்டி என்பதால் சாம்சனுக்கு வாய்ப்பா ? – கோலியின் முடிவு இதுதானாம்

Samson-1

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

kohli 3

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி கேரள மாநிலத்தில் நடைபெறுவதால் டி20 அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள கேரளாவை சேர்ந்த இளம்வீரர் சாம்சனுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்களிடமும் மேலும் சில கிரிக்கெட் விமர்சகர்கள் இடையே எழுந்துள்ளன.

ஆனால் கோலி ஏற்கனவே அணியின் சூழ்நிலைக்கு ஏற்ப வீரர்கள் மாற்றம் இருக்கும் என்று ஏற்கனவே கூறி அறிவித்திருந்தார். ஆனால் இந்த போட்டியில் சாம்சன் சேர்ப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. ஏனெனில் அடுத்த ஆண்டு உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு பண்டிற்கு தொடர்ந்து வாய்ப்புகளை அளித்து வருகிறார். எனவே இன்றைய போட்டியில் பண்ட் விளையாடுவது உறுதி. மேலும் அப்படி சாம்சன் இந்த போட்டியில் விளையாட வேண்டும் என்றால் துவக்க வீரராக மட்டுமே விளையாட வாய்ப்பு இருந்தது. ஆனால் அதுவும் தற்போது கிடைக்காது

samson

ஏனெனில் ரோகித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருவதால் அந்த வாய்ப்பும் தற்போது பறிபோயுள்ளது மேலும் கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அதே அணியை இந்தப் போட்டியிலும் கோலி விளையாட வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதால் கேரளாவில் போட்டி நடந்தாலும் சாம்சனுக்கு வாய்ப்பு என்பது கிடையாது என்பது மட்டும் உறுதி ஆகி உள்ளது. இதுவே கோலியின் முடிவாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -