இவ்வளவு கஷ்டத்துக்கு பிறகு வாய்ப்பு கெடச்சி இப்படியா ஆகணும். சாம்சனுக்கு ஏற்பட்ட பரிதாபம் – விவரம் இதோ

Samson
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக நடைபெறாமல் போனது. அடுத்து இரண்டாவது போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் தற்போது 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Cup

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று புனே மைதானத்தில் சற்று நேரத்துக்கு முன் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் மலிங்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்தியா விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை அடித்துள்ளது. பின்னர் தற்போது 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து இலங்கை விளையாட தயாராகி வருகிறது. இந்த போட்டியில் முதல் விக்கெட்டிற்கு தவான் மற்றும் ராகுல் ஜோடி சிறப்பாக விளையாடி 97 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில் இந்த போட்டியில் முதல் விக்கெட்டாக தவான் ஆட்டமிழந்து வெளியேறியதும் கோலிக்கு பதிலாக சஞ்சு சாம்சன் களம் புகுந்தார்.

samson

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனது வாய்ப்புக்காக காத்திருந்த சாம்சன் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அமர்க்களப்படுத்தினார். ஆனால் அதற்கடுத்த இரண்டாவது பந்தில் எல்.பி. முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் ஆட்டம் இழந்ததும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் சற்று அதிர்ச்சி அடைந்தனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம் பிடித்து இப்படி ஒரு சோகமா என்பதுபோல் சாம்சனுக்கு இந்த போட்டி சற்று ஏமாற்றத்தை அளித்தது என்றே கூறலாம்.

Advertisement