அணியில் இருந்து நீக்கப்பட்டாலும் சாம்சனுக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறதாம் – எப்படி தெரியுமா ?

Samson-1

இந்திய அணி தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

Samson

இந்த டெஸ்ட் தொடருக்கு அடுத்து தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த இரு தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தத் தொடரில் இளம் வீரரான சஞ்சு சாம்சன் வாய்ப்பு மறுக்கப்பட்டது. வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்ற அவர் ஒரு போட்டியில் விளையாடவில்லை. இந்நிலையில் தற்போது இந்த தொடரிலும் அவர் வாய்ப்பு மறுக்கப்பட்டது சர்ச்சைக்கு உரிய விடயமாக மாறியது ஏனெனில் நன்றாக விளையாடாத பண்டுக்கு வாய்ப்பு கொடுப்பதற்கு பதில் சிறப்பாக விளையாடும் சாம்சன்க்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்று இணையத்திலும் ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர்.

samson

இந்நிலையில் மீண்டும் சாம்சன் அணியில் இடம்பிடிக்க ஒரு வாய்ப்பு உள்ளதாகவும் அதன்படி அவர் இந்திய அணியின் காத்திருப்புப் பட்டியலில் தற்போது உள்ளார் என்றும் யாருக்கேனும் அணியில் காயம் ஏற்பட்டு தொடரில் இருந்து வெளியேறினால் அவருக்கு பதிலாக மீண்டும் சாம்சன் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. எனவே இந்தியனின் மாற்று வீரராக தற்போது சாம்சன் அணியில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அணியில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டு விலகும் பட்சத்தில் அவர் அணியில் இடம் பிடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -