சிறந்த விக்கெட்கீப்பர், பேட்ஸ்மேன் யோயோ பயிற்சியில் தவறியதால்.! இந்திய அணியில் வாய்ப்பு பறிபோனது..!

samson

இந்திய அணி வரும் மாதங்களில் தொடர்ந்து பல தொடர்களில் விளையாடவுள்ளது. இந்த தொடர்களுக்கான இந்திய வீரர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இதற்காக 40 மேற்பட்ட இந்திய வீரர்களுக்கு கடந்த (ஜூன் 5) ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜூன் 10 ) தேதி வரை இந்த ‘யோ யோ’ டெஸ்ட் நடந்தப்பட்டு வந்தது. இதில் தேர்ச்சி பெரும் வீரர்கள் மட்டுமே இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என்று இருந்த நிலையில், இளம் வீரரான சஞ்சீவ் சாம்சன் இந்த தேர்வில் தோல்வியடைந்துள்ளார்.

sanju-samson

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி மோதும் 4 ஒரு நாள் போட்டிகளுக்கும் மற்றும் இந்தியா A அணி -இங்கிலாந்து லயன்ஸ் – வெஸ்ட் இண்டீஸ் மோதும் முத்தரப்பு போட்டிக்கும் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முத்தரப்பு போட்டி இந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதியும்,அதன் பின்னர் இங்கிலாந்திற்கு எதிராக 4 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் ஜூலை மாதம் 16 ஆம் தேதியும் தொடங்கவுள்ளது.

இந்த போட்டிகளில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி ஏ அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் போட்டியில் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் செயல்படுவார் என்றும் டெஸ்ட் போட்டியின் கேப்டனாக கருண் நாயர் செயல் படுவார் என்றும் எம்.எஸ்.கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்கு குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

samson

இந்நிலையில் இந்த இரு தொடர்களிலும் இளம் வீரரான சஞ்சீவ் சம்சோனிலன் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஆனால் நேற்று நடைபெற்ற யோ யோ தேர்வில் சஞ்சீவ் சாம்சன் நிர்ணயிக்கப்பட்ட 16.1 என்ற மதிப்பெண்ணை பெற முடியாமல் தோல்வியடைந்தார். இதனால் அவர் இடம் பெற்றிருந்த இரண்டு தொடர்களிலுமே அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது. இந்திய ஏ அணியில் இடம்பெற்றும் ‘யோ யோ’ தேர்வில் தகுதி பெற முடியாமல், இந்திய ஏ அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்த இந்த இளம் வீரருக்கு இது பெரும் துரதிர்ஷ்டம் தான்.