இதுக்குமேல அணியில் இடம்பிடிக்க இவர் என்ன பண்ணனும். இந்திய அணியின் சர்ச்சையான தேர்வு – கொதிக்கும் ரசிகர்கள்

Samson-1

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இன்று விளையாட இருக்கிறது. இந்த தொடர் முடிவடைந்த பின்னர் உடனடியாக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

இந்த தொடருக்கான டி20 இந்திய அணி மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த ரோகித் சர்மா முகமது சமி ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனியின் பெயர் இடம்பெறவில்லை. அதேபோன்று கடந்த சில தொடர்களாக அணியில் சேர்க்கப்பட்டிருந்த சஞ்சு சாம்சன் திடீரென்று நீக்கியுள்ளனர்.

அவரின் இந்த நீக்கம் தற்போது சர்ச்சையாக மாறி உள்ளது. ஏனெனில் தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளில் சொதப்பும் பண்டிற்கு வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. ஆனால் உள்ளூர் போட்டிகளில் தனது திறமையை தொடர்ச்சியாக நிரூபித்து அணியில் இடம்பிடித்த சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களை ஆழமாக பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலர் குறிப்பிட்டதாவது : சாம்சன் அப்படி என்ன சிறப்பாக செயல்படவில்லை. அவருக்கான வாய்ப்பை மறுத்து ஏன் இருக்கிறீர்கள் ?

Samson

ஆனால் அதே போன்று பண்ட் என்ன சாதித்தார் ? அவருக்கான வாய்ப்புகளை கொடுத்து கொண்டே இருக்கிறீர்கள் என்பது போல கேள்விகளை எழுப்பியுள்ளனர். மேலும் ஒரே போட்டியில் விளையாட வாய்ப்பு கொடுத்து சாம்சனின் திறமையை எப்படி சோதிக்கலாம் ? அவருக்கு மேலும் சில வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். அவர் திறமையான வீரர் நிச்சயம் அவர் இந்திய அணிக்கு பெரும் பங்களிப்பை தருவார் என்றும் அவருக்கான வாய்ப்பு எப்போது தரப்படும் ? என்றும் கேள்விகளை எழுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -