பேட் அப் செய்து ரெடியாக இருக்கும் இளம்வீரர். இன்னைக்கு கோலியின் இடத்தில் இறங்கப்போவது இவர்தானா ?

Kohli

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக நடைபெறாமல் போனது. அடுத்து இரண்டாவது போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் தற்போது 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Cup

இந்நிலையில் இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று புனே மைதானத்தில் சற்று நேரத்துக்கு முன் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் மலிங்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்தியா விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணி தற்போது வரை 7 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்த போட்டியில் முதல் விக்கெட் விழும் பட்சத்தில் 3 ஆவது வீரராக கோலிக்கு பதிலாக சாம்சன் களமிறங்குவார் என்று தெரிகிறது. ஏனெனில் கோலி வீரர்களின் இருக்கையில் தயாராக இல்லாமல் அமர்ந்தபடி இருக்கிறார். ஆனால் சஞ்சு சம்சன் பேட்அப் செய்து ஹெல்மெட் அணிந்து ரெடியாக இருப்பதால் அவரே மூன்றாவது வீரராக இறங்குவார் என்று தெரிகிறது.

samson 2

ஏனெனில் சமீபத்தில் சில போட்டிகளாக ஸ்ரேயாஸ் அய்யர், ஷிவம் துபே ஆகியோருக்கு தனது மூன்றாம் இடத்தை விட்டுக் கொடுத்து கோலி நான்காம் இடத்தில் விளையாடி வருகிறார். எனவே இந்த போட்டியிலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ள சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக கோலி நான்காம் இடத்தில் விளையாட வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -