சூரியகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் தேர்வால் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்கள் – இவர்கள் தான்

Sky
- Advertisement -

இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் 4வது போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கு பின்னர் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் அங்கேயே நடைபெற உள்ளது.

INDvsENG

- Advertisement -

இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்களை பிசிசிஐ நேற்று தேர்வு செய்து வெளியிட்டது. அந்த அணியில் தமிழக வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் மற்றும் ராகுல் திவாதியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நீண்ட எதிர்பார்ப்புக்கு மற்றும் காத்திருப்புக்கு பிறகு அணியில் இணைந்து இருக்கும் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் இந்திய டி20 அணியில் இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம் பெற்றதன் காரணமாக இரு முக்கிய வீரர்கள் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த வீரர்கள் யாரெனில் எப்போதும் ஷார்ட்டர் பார்மெட்டில் சிறப்பாக விளையாடும் மனிஷ் பாண்டே மற்றும் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும்தான். இதில் சஞ்சு சாம்சன் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்த தவறியவர் டி20 போட்டிகளில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் வெறும் 83 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

- Advertisement -

Samson

ஆனால் மனிஷ் பாண்டே நீண்டகாலமாகவே அணியில் உள்ளேயும், வெளியேயும் இருந்தாலும் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்த கூடிய ஒருவர், இருப்பினும் ஐபிஎல் தொடரில் இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் சிறப்பான ஆட்டம் இந்திய அணியில் அவர்களைத் தேர்வு செய்வதில் தவிர்க்கமுடியாத ஒரு காரணத்தை ஏற்படுத்தியது. இவர்களின் தேர்வினால் தற்போது சஞ்சு சாம்சன் மற்றும் மனிஷ் பாண்டே ஆகிய இருவரும் வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

pandey 1

இதனிடையே மனிஷ் பாண்டேவிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement