ராகுல் டிராவிடின் மகன் 14 வயதில் கிரிக்கெட்டில் பண்ணியிருக்கும் சாதனையை பாருங்கள் – அடுத்த டிராவிட் ரெடி

Samit

இந்திய அணியின் ஆல்டைம் லெஜெண்ட்களில் ஒருவர்தான் இந்திய அணியின் தடுப்புச் சுவர் என்று வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட். இவர் ஆடிய காலகட்டத்தில் இந்திய அணியை பல கட்டங்களில் இக்கட்டில் இருந்து மீட்டெடுத்து இருக்கிறார். மேலும் டெஸ்ட் போட்டிக்கே உரித்தானவர் போன்று இவர் ஆடும் ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களிடம் அவ்வளவு வரவேற்பு பெற்றது.

samit 1

மேலும் எதிரணிகளின் தனது பொறுமையால் சோதிக்கும் டிராவிட்டின் தடுப்பாட்டத்தின் காரணத்தினாலே அவரை இந்திய அணியின் தடுப்புச் சுவர் என்று ரசிகர்கள் அழைத்த காலமும் உண்டு. கிரிக்கெட்டில் ஆடிய போது சுயநலத்தோடு ஆடாத ஒரே வீரராக புகழ்பெற்ற ட்ராவிட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் தனது அதே உழைப்பை இந்திய அணிக்காக கொடுத்து வருகிறார்.

அண்டர் 19 மற்றும் இந்திய ஏ அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் டிராவிடின் தலைமையில்தான் திறமைமிக்க வீரர்களான அகர்வால், பிரித்வி ஷா, கில், பிரியம் கார்க் மற்றும் ஜெய்ஷ்வால் போன்ற ஏராளமான வீரர்கள் இந்திய அணிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். தற்போது தேசிய கிரிக்கெட் அகடமியில் தலைவராக இருக்கும் டிராவிட் பலவகைகளிலும் இந்திய அணிக்கு தனது சேவையை கொடுத்து வருகிறார்.

samit 2

இந்நிலையில் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் அவரைப்போலவே மிகப்பெரிய கிரிக்கெட் வீரராக மாறி வருகிறார். கர்நாடகாவில் நடைபெற்று வரும் 14 வயதிற்குட்பட்ட ஒரு போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். சமித் டிராவிட் அந்த போட்டியில் 250 பந்துகளில் 201 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். மேலும் இரண்டாவது இன்னிங்சில் 94 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

Samit 3

பேட்டிங் மட்டும் இன்றி பந்துவீச்சிலும் அசத்தும் சமித் டிராவிட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் அவர் கர்நாடக அண்டர் 14 அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் எதிர்காலத்தையும் தனது திறமையை வளர்த்து இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.