இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியின் மாற்று துவக்க வீரராக இடம் பெற்ற 19 வயது வீரரான சாம் கோன்ஸ்டாஸ் தான் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே இந்திய அணிக்கு எதிராக அரைசதம் அடித்து அசத்தினார். அதுமட்டுமின்றி ஜஸ்ப்ரீத் பும்ரா ஓவரிலும் அவர் மிகச் சிறப்பாக விளையாடி அனைவரது மத்தியில் கவனத்தை ஈர்த்து இருந்தார்.
என் கும்பத்திற்கே விராட் கோலியை பிடிக்கும் :
ஆனாலும் களத்தில் அவரது ஆக்ரோஷமான செயல்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை பெற்றிருந்தன. குறிப்பாக பும்ராவை சிக்ஸர் அடித்த பிறகு ரசிகர்களை சத்தம் எழுப்ப சொல்லி கை காட்டியது. விராட் கோலியுடன் தோள் பட்டையுடன் மோதியது. ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்யும்போது ஸ்லெட்ஜிங் செய்தது, பும்ராவிடம் வசை பாடியது என இந்த தொடர் முழுவதும் அவர் சற்று ஆக்ரோஷமாகவே நடந்து கொண்டார்.
இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த தொடர் முடிந்த பின்னர் தனது ரோல் மாடலான விராட் கோலி குறித்து பேசுகையில் அவர் கூறியதாவது : சிறுவயதில் இருந்து விராட் கோலி தான் என்னுடைய ரோல் மாடல். என்னுடைய குடும்பத்திற்கே அவரை மிகவும் பிடிக்கும்.
அந்த மோதலுக்கு பிறகு நான் விராட் கோலியை நேரில் சந்தித்து நிறைய பேசினேன். மேலும் நீங்கள் தான் என்னுடைய ரோல் மாடல் என்றும் கூறினேன். அவருடன் களத்தில் இணைந்து விளையாடுவது உண்மையிலேயே எனக்கு கிடைத்த கௌரவம்.
அவர் பேட்டிங் செய்யும்போது எதிர்முனையில் விராட் கோலி இருக்கிறார் என்பதை நினைத்து கூட என்னால் பார்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு அவரை எனக்கு பிடிக்கும். விராட் கோலி மிகவும் எளிமையான நபர். அது மட்டும் இல்லாமல் அன்பாக பேசக்கூடியவர். இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த கையோடு :
இதையும் படிங்க : கவாஸ்கரை இப்படி புண்படுத்திருக்கக்கூடாது.. அதுக்கு அதிர்ஷ்டம் பண்ணிருக்கனும்.. ஆஸி மீது கிளார்க் அதிருப்தி
இலங்கைத் தொடருக்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அதில் சிறப்பாக செயல்படுங்கள். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்திருந்தார். அவரைப் போலவே நான் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த வீரராக வர விரும்புகிறேன் என சாம் கோன்ஸ்டாஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.



