நடராஜன் எவ்ளோ திறமையான பவுலர்னு எனக்கு அந்த ஓவரில் தான் தெரிஞ்சது – சாம் கரன் ஓபன்டாக்

Curran
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று புனே மைதானத்தில் முடிவடைந்தது. நேற்றைய பரபரப்பான மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் இந்தத் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இந்த மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சிறப்பாக விளையாடி 48.2 ஓவர்களில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

trophy

- Advertisement -

இந்திய அணி சார்பாக தவான் 67 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 64 ரன்களையும், பண்ட் 78 ரன்கள் குவித்து அசத்தினார்கள். அதன்பின்னர் 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி துவக்க வீரர்களை அடுத்தடுத்து இழந்தாலும் மலான் மற்றும் சாம் கரண் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக ஒரு கட்டத்தில் வெற்றிக்கு அருகில் வந்தது. வெற்றிக்கு முக்கியமான அந்த கடைசி வரை தமிழக வீரரான நடராஜன் வீசினார்.

அந்த ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்திலேயே மார்க் வுட் ரன் அவுட்டாக போட்டியில் பரபரப்பு அதிகரித்தது. எனினும் மீதமுள்ள 5 பந்துகளில் ஒரு பவுண்டரி உட்பட 5 ரன்கள் மட்டுமே சென்றதால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடர், டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர் என அனைத்தையும் இந்திய அணி தன் வசப்படுத்தியது.

Curran 2

இந்நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான சாம் கரன் சிறப்பாக விளையாடி இறுதி நேரத்தில் இந்திய அணிக்கு பயத்தை காட்டினார் என்று கூறலாம். 83 பந்துகளை சந்தித்த சாம் கரண் 95 ரன்கள் குவித்து கடைசி வரை தனது போராட்டத்தை அளித்தது ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. மேலும் இவர் அடித்த இந்த 95 ரன்கள் மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த சாதனை ஒன்றை அவர் நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து இந்த பரபரப்பான ஆட்டம் குறித்து பேசிய ஆட்டநாயகன் சாம் கரண் கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் வெற்றிபெறவில்லை இருந்தாலும் நான் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. வெற்றி பெறுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் இந்த போட்டியின் தோல்வியின் மூலம் எனக்கு அனுபவம் கிடைத்துள்ளது. நீண்ட நாட்களாக இங்கிலாந்து அணிக்காக இது போன்ற விளையாட்டை நான் வெளிப்படுத்தவில்லை. ஆனால் இப்போது வெளிப்படுத்த துவங்கியுள்ளேன்.

curran 1

இந்திய வீரர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள் இந்த போட்டியில் நடராஜன் இக்கட்டான கடைசி ஓவரில் மிகச் சிறப்பாக பந்து வீசினார். பேட்ஸ்மேன்கள் எளிதாக அடிக்கும் இறுதி நேரத்தில் டெத் ஓவரை எவ்வாறு பந்து வீச வேண்டும் என்பதை அறிந்து பந்துவீசினார். கடைசி ஓவரை அற்புதமாக வீசி தான் ஒரு திறமையான பவுலர் என்பதை நடராஜன் நிரூபித்து விட்டார். இந்த போட்டியில் இருந்து நிறைய விடயங்களை கற்று கொண்டேன் என்று சாம் கரன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement