ஹாட்ரிக் எடுத்ததே எனக்கு இவர்கள் மூலம்தான் தெரியும் – சாம் குரான்

Sam-Curran
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலியில் நடந்த போட்டியில் பஞ்சாப் அணியும், டெல்லி அணியும் மோதின. இதில் முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது டெல்லி அணி. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக மில்லர் 43 ரன்களை குவித்தார்.

Dc

- Advertisement -

அதனை தொடர்ந்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி சார்பாக 2.2 ஓவர்கள் வீசி 11 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

போட்டி முடிந்த பிறகு பேசிய ஆட்டநாயகன் சாம் குரான் கூறியதாவது : என்னுடைய முழு திறனையும் என்னுடைய அணிக்காக தர ஆசைப்பட்டேன். போதுமான அளவிலான ஆட்டத்தை எனது அணிக்கு தந்துவிட்டேன். மேலும், எனது பள்ளிக்கால கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே துவக்க ஆட்டக்காரராக விளையாடி உள்ளேன். அதன்பிறகு தற்போது தான் துவக்க ஆட்டக்காரராக விளையாடுகிறேன். கடந்த சில மாதங்களாக எனது பேட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறேன்.

Sam

மேலும், நான் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து எனக்கே தெரியாது. ரசிகர்களின் ஆரவாரம் மற்றும் சக வீரர்களின் மகிழ்ச்சியினாலே தான் அவர்கள் நான் எடுத்த ஹாட்ரிக் விக்கெட்டை கொண்டாடுகிறார்கள் என்று தெரியும். அதன் பின்னரே நான் எனது ஹாட்ரிக் விக்கெட் பற்றி தெரிந்து கொண்டேன் என்று சாம் குரான் கூறினார்.

Advertisement