நான் துவக்க வீரராக களமிறங்கும்போது கேப்டன் அஸ்வின் என்னிடம் இதை மட்டும் தான் கூறினார் – சாம் குரான்

Sam-Curran
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலியில் நடந்த போட்டியில் பஞ்சாப் அணியும், டெல்லி அணியும் மோதின. இதில் முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது டெல்லி அணி. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக மில்லர் 43 ரன்களை குவித்தார்.

Dc

- Advertisement -

அதனை தொடர்ந்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி சார்பாக 2.2 ஓவர்கள் வீசி 11 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

போட்டி முடிந்து ஆட்டம் குறித்து பேசிய சாம் குரான் கூறியதாவது : இந்த போட்டியில் நான் துவக்க ஆட்டக்காரராக களமிறங்க அஸ்வின் கேட்டுக்கொண்டார். நான் பள்ளிக்கால கிரிக்கெட்டில் தான் இதற்கு முன் துவக்க வீரராக களமிறங்கி உள்ளேன். அதன்பிறகு இந்த போட்டியில் தான் களமிறங்கினேன். கடந்த பல மாதங்களாக நான் பேட்டிங்கிலும் கவனம் செலுத்தி வந்தேன். அதன்படி அஸ்வின் என்னிடம் வந்து கூறியது எனக்கு ஆச்சரியமளித்தது.

Curran

கெயில் இந்த போட்டியில் ஆடவில்லை. அதனால் அவருக்கு அளிக்கப்பட்ட சுதந்திரம் போன்று பேட்டிங்கில் உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன். நீங்கள் உங்களுடைய இயற்கையான ஆட்டத்தினை இந்த போட்டியில் வெளிப்படுத்துங்கள் என்றார்.அதுவே என்னை உற்சாகப்படுத்தியது என்று சாம் குரான் கூறினார்.

Advertisement